16 Sept 2017

களுவாஞ்சிகுடியில் ஒன்றாய்க் கல்விகற்ற சகபாடிகளின் ஒன்றுகூடல்

SHARE
களுவாஞ்சிகுடியில் உள்ள விநாயகர் வித்தியாலயம், சரஸ்வதிவித்தியாலயம், பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் தேசியபாடசாலை, என்பவற்றில் 1987, 1993, 1996, காலப்பகுதிகளில் முறையே ஆரம்பக்கல்வி, சாதாரணதரம் மற்றும் உயர்தரத்தை நோக்கி ஒன்றாய் கல்விகற்ற சகபாடிகளின் ஒன்றுகூடல் நிகழ்வானது கடந்த சனிக்கிழமை (09) களுவாஞ்சிகுடி டிலக்சன் ரெஸ்ரூறண்டில் நடைபெற்றது. 
இந்நிகழ்வில் அறுபதிற்கும் மேற்பட்ட ஒன்றாய் கல்வி பயின்ற சகபாடிகளும் அவர்களின் குடும்பங்களும் பங்குபற்றினர். இதன் நோக்கமானது சகபாடிகளுக்குள் நட்பினையும் ஒருங்;கிணைப்பினையும் மீள் உருவாக்குவதனூடக பரஸ்பர வலுவூட்டல் மற்றும் குடும்ப, சமூக மேம்பாட்டினைக் கட்டியெழுப்புவதாகும்.


அதனைத் தொடர்ந்துநிகழ்வில் தலைவர் க.காண்டீபன் 

இதன்போது அவர்களது பாடசாலைக் காலத்தை மீட்கும் ஞாபகங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களும், அனுபவங்களையும் இதன்போது வெளிக்ககொணரப்பட்டன.  

இதன்போது கலந்து கொண்டிருந்தோர் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தமது கடந்த காலசுiவையான அனுபங்களை தமக்குள் மீட்டிப்பார்த்ததுடன் ஒருவருக்கொருவர் பரஸ்பரத்தை பகிரக்கூடிய செயற்பாடுகளும் இடம்பெற்றதுடன், அக்காலப் பகுகளில் இடம் பெற்ற மறக்க முடியாத சுவாரஸ்யமான அனுபவங்களும் பகிரப்பட்டன. 

மேலும் கலந்துகொண்ட சிறுவர்களை மகிழ்விக்கும் நிகழ்வுகளை மட்டக்களப்பு வண்ணத்தி பூச்சி சமாதானசிறுவர் பூங்காஅமைப்பினர் நிகழ்த்தியிருந்தனர். 

இந் நிகழ்வில் பல்வேறு நாடுகளிலுள்ள சகபாடிகளும் அந்நாடுகளிலிருந்தவாறே ஒளிப்பட நேரலை மூலம் இணைந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அத்துடன் எதிர்காலத்தை நோக்கி எனும் தொனிப்பொருளில் இதன்போது கலந்த கொண்ட சுதர்சன் மற்றும் ராஜன்  ஆகியோரால் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் பற்றி அனைவருடனும் கருத்துபகிரப்பட்டு இறுதியில் சகபாடிகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களுக்கு ஏற்படும் துன்பியல் சம்பவங்களில் அனைவரும் தோள் கொடுத்தல், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தல் மற்றும் பிள்ளைகளின் கல்வி விருத்தி தொடர்பாகவும் அத்துடன் எதிர்காலங்களில் எமது பிரதேசத்தின் சமூகமேம்பாடு, கல்வி அபிவிருத்தி என்பவற்றிலும் ஈடுபடுவதாக தீர்மானிக்கப்பட்டதுடன, ; இதுதொடர்பானகுழுவும் தெரிவுசெய்யப்பட்டது.

இதன் தலைவராக க.காண்டீபனும் செயலாளராக ப.எழில்வாணியும் பொருளாளராக ராஜனும் ஏகமனதாகதெரிவுசெய்யப்பட்டதுடன் பிரதேசங்களுக்குரிய தொடர்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர். எதிர்காலத்தில் இதற்கெனநிருவாககுழுவும் வழிகாட்டல் கையேடும் உருவாக்க தீர்மானிக்கப்பட்டதுடன் இதுபோன்ற நிகழ்வுகள் வருடாவருடம் ஓகஸ்ட் மாதகாலப்பகுதியில் நடத்துவதெனமுடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சிறுவர்களின் கலைநிகழ்ச்சி மற்றும் சகபாடிகளில் பாடல்கள் போன்றனவும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.





SHARE

Author: verified_user

0 Comments: