இறக்காமம் மாணிக்கமடு பிரதேசத்தில்; சனிக்கிழமை 02.09.2017 மீண்டும் புத்தர் சிலை வைக்க எடுக்கப்பட்ட முயற்சியால் பதற்ற நிலை தோன்றியிருந்தது.
சில சிங்கள புத்தர்களும், சிங்களவர்களும் இணைந்து தமிழருக்குச் சொந்தமான காணியை அவரிடமிருந்து விலைக்கு வாங்கி அந்த காணிக்குள்ளேயே சிலையையும் பன்சலைக்கான விடுதியையும் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாலேயே இந்தப் பதற்ற நிலை தோன்றியதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இது ஒரு அபகரிப்பும், சட்ட விரோதமானதும் இனவிரோத நடவடிக்கைக்கான முன்னெடுப்பும் என்று கருதியதால் சமாதான விரும்பிகள் இந்த விடயத்தைத் தடுத்து நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்ததுடன் பிரதேச அரசியல்வாதிகள், மற்றும் பொலிஸாருக்கும் அறிவித்தனர்.
குறித்த சம்பவத்தை ஆராய்வதற்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் விஜயம் மேற்கொண்டு குறித்த மத அமைப்பின் பிரதிநிதிகளுடனும், பாதுகாப்பு படையினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டதோடு இது தொடர்பாக நேரடியாக ஜனாதிபதியின் கவனதிற்கொண்டு வருவதற்கான நடவடிக்கைளிலும் ஈடுபட்டார்.
உடனடியாக புத்தர் சிலை வைப்பு மற்றும் விடுதி வசதி அமைப்பதற்கான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.
அதனைத் தொடந்து பிரதேசத்தில் நிலவிய காணப்பட்ட பதற்ற நிலை தணிந்ததுடன் அமைதியான நிலைக்கு திரும்பியது.
இந்தப் பிரதேசத்தில் சமாதானத்தைக் குழப்பும் நடவடிக்கைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்குமாறு பிரதேச சமாதான விரும்பிகள் கோரி நிற்கின்றனர்.
0 Comments:
Post a Comment