10 Sept 2017

சுகாதார வைத்திய அதிகாரி நிருவாக எல்லைகளில் மாற்றம்

SHARE
ஏறாவூர் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலிருந்து 2016ஆம் ஆண்டு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்குள் இணைக்கப்பட்ட பகுதிகளை மீளவும் எவ்வித மாற்றமுமின்றி 2016ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தவாறு நடைமுறைப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு, பிராந்திய சுகாதார சேவைகள்  பணிப்பாளர் அலுவலகத்தினால் பணிக்கப்பட்டுள்ளது.
இது விடயமாக செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது@

மேற்படி சுகாதார வைத்திய அதிகாரி நிருவாக எல்லைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பான சுகாதார அமைச்சரின் 09.08.2017ஆம் திகதிய கடிதம் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுச் செயலாளரது 10.08.2017 திகதியிட்ட EP/04/Ej/01/01இலக்கக் கடிதம் ஆகியவற்றின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலிருந்து செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்குள் இணைக்கப்பட்ட பகுதிகளை மீளவும் எவ்வித மாற்றமுமின்றி 2016ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தவாறு நடைமுறைப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் சுகாதார சேவைகள் பராமரிப்பிலிருந்த ஏறாவூர் 4 ஆம் 5 ஆம் குறிச்சிகள் மற்றும் எல்லை நகர் ஆகிய கிராமங்கள் கடந்த ஆண்டு (2016) ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி நிருவாகப் பிரிவுக்குள் இணைக்கப்பட்டன.

இதன்படி இம்மூன்று ஊர்களிலும் 1140 குடும்பங்களைச் சேர்ந்த 3892 பேர் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் கீழ் கடந்த 20 மாதகாலமாக நிருவகிக்கப்பட்டு வந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: