30 Sept 2017

மட்டக்களப்பில் தேசிய நல்லிணக்கத்திற்கான கிழக்கின் குரல்கள் என்ற காரிக்கைகளை வலியுறுத்தி தேசத்தின் அமைதிக்காக சர்வமத சமாதான ஊர்வலம்.

SHARE
உலக சமாதான தினத்தை அனுஷ‪;டிக்கும் முகமாக தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட சமாதான ஊர்வலம் சனிக்கிழமை 30.09.2017 மட்டக்களப்பில் இடம்பெற்றது.
சமாதானத்தின் அவசியம் உணரப்பட்டுள்ள சமகாலத்தில் அதனை செயலுருப்பெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதை வலியுறுத்தியும் இந்த சமாதான ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்ததாக பேரவையின் இணைப்பாளர் இராசையா மனோகரன் தெரிவித்தார். தெரிவித்தார்.

காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு திருமலை வீதி தாண்டவன்வெளி காணிக்கை மாதா தேவாலய முன்றலில் இருந்து ஆரம்பமான இவ்வூர்வலம் மட்டக்களப்பு காந்திப் பூங்காவைச் சென்றடைந்தது.

இந்தப் பேரணியில் பங்குகொண்டவர்கள் “காணாமல்போனோர் தொடர்பாக அரசே பதில் கூறு, ஊழல் மோசடிக்காரர்களை சட்டத்திற்கு முன் நிறுத்து, அதிகாரத்தைப் பகிர்ந்து தேசிய இனப்பிரச்சினைக்கு முடிவுகட்டு, கிழக்கு மக்களின் நிலங்களை உடன் கையளி,” என்ற பதாதைகளை தேசிய நல்லிணக்கத்திற்கான கிழக்கின் குரல் என்ற பெரும் கோஷத்துடன் ‪  வலியுறுத்தினர்.




SHARE

Author: verified_user

0 Comments: