25 Sept 2017

இன விகிதாசாரத்திற்கு ஏற்ற வகையில் அபிவிருத்திகள், வேலைவாய்ப்புக்கள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துதான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்தோம் - நடா

SHARE
இன விகிதாசாரத்திற்கு ஏற்ற வகையில் அபிவிருத்திகள், வேலைவாய்ப்புக்கள் என்பன இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைத்துதான் நாங்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்தோம். இவற்குக்கு ஏற்றாற் போல்தான்  செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. 
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளர். மேற்படி கிழக்கு மாகாணசபை உறுப்பினின் சிபார்சுக்கமைய களுவாஞ்சிகுடி மாணல் றோட் 30 லெட்சம் ரூபா ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதன் ஆரம்ப வேலை வெள்ளிக்கிழமை (22) மாலை ஆம்பித்து வைக்கப்பட்டன. இந்த ஆரம்ப வேலையை தொடக்கி வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…..

கிழக்கு மாகாணசபையில் சேர்ந்த காலத்தில் நாங்கள் எதிர்க்கட்சியில் அமர்த்தப்பட்டிருந்தோம்,  அக்காலகட்டத்தில் எம்மால் எதுவித வேலைத்திட்டங்களையும் செய்ய முடியாதவர்காளக இருந்தோம். பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைபினதும், தமிழ் மக்களினதும் ஏகோபித்த ஆதரவுடன் மஹிந்த ஆட்சி மாற்றப்பட்டு மைத்திரி ஆட்சி ஏற்படுத்தப்பட்ட பின்னர் எமது கிழக்கு மாகாண சபையிலும் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும் 11 உறுப்பினர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வைத்துக் கொண்டு முதலமைச்சர் பதவியைப் பெற்றுக் கொள்ளவில்லை ஏன் என்ற நியாயமான கேள்வியை எம்மிடம் எமது மக்கள் கேக்கின்றார்கள். ஆனால் கிழக்கு மாகாணசபையில் மொத்தம் 37 பேர் நாங்கள் 11 பேர் 26 பேர் எங்களுக்கு எதிர். இதுதான் உண்மையான நிலைப்பாடு. அந்த நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியியைச் சேர்ந்த 4 பேர் எம்முடன் இணைந்து கொண்டார்கள். அவர்களையும் சேர்த்தால் 15 பேர் மாத்திரம்மான் நாங்கள் இருந்தோம். ஏனையவர்கள் அனைவரும் ஒருபக்கமாகத்தான் இருந்தர்கள். அதன் காரணமாகத்தான் நாங்கள் எதிர்க்கட்சியில் அமர வேண்டியிருந்தது.

மொத்த உறுப்பினர்கள் 37 பேரில் 50 வீத்திற்கு அதிகமான உறுப்பினர்கள் இருந்தால் மாத்திரமே ஆட்சியை அமைக்க முடியும். அதற்குரிய சந்தர்ப்பம் எமக்குக் கிடைக்கவில்லை. அக்காலகட்டத்தில் எமது மக்களும் சில தவறுகள் விட்டுள்ளார்கள், எமது மக்களை சிலர் மாற்றுக் கட்சிகள் பக்கமும், மஹிந்த அரசு பக்கமும் மாற்றியிருந்தார்கள். தமிழ் மக்கள் கடந்த காலங்களில் வாக்களித்த வீதங்கள் குறைவாகத்தான் உள்ளன. கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் அதிகளவு வாக்குகளைப் அளித்திருந்தால் மேலும் 3 உறுப்பினர்களை மேலதிகமாகப் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கில் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்கும். இதுதான் நடந்த உண்மை.

பின்னர் முதலமைச்சர் பதவிக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு போராடியது. அதுவும் பலனளிக்கவில்லை. உதுமான்லெவ்பை, சந்திரகாந்தன் (பிள்iளாயான்) பொன்றோர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்க நடவடிக்கையையும் எடுத்திருந்தார்கள். பின்பு நல்லாட்சியின் தலைவர்களான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  ஆகியோர்  அவர்களது கட்சிகளும் பாதிக்கப்படும் என்ற காரணங்களினால் எமக்குரிய உந்துதலைக் கொஞ்சம் தளர்த்தியிருந்தார்கள். அதன் பின்பு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு கிழக்கில் 2 அமைச்சர்களையும், ஒரு பிரதித் தவிசாளர் பதவியையும் பெற்ற பின்னர்தான் மக்களுக்கு ஓரளவேனும் இவ்வாறான அபிவிருத்தி வேலைத்திட்டங்கைள மேற்கொள்ள சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளன. இன விகிதாசாரத்திற்கு ஏற்ற வகையில் அபிவிருத்திகள், வேலைவாய்ப்புக்கள் என்பன இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன் வைத்துதான் நாங்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்தோம். இவற்குக்கு ஏற்றாற் போல்தான்  செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. 

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பெறுத்தவரையில் துறைநீலவணையிலிருந்து கதிரவெளி வரைக்கும் எமது தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் எமக்கு வரும் திட்டங்களை சிறிது சிறிதாகத்தான் பங்கீடு செய்யவேண்டியுள்ளது என்றார்.










SHARE

Author: verified_user

0 Comments: