வீதி விபத்தற்ற நாடாக உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் களுவாஞ்சிகுடி பொலிசாரின் ஏற்பாட்டில் சாரதிகளை அறிவுறுத்தும் கூட்டமானது இன்று 05.09.2017 காலை 09.30 மணியளவில் களுவாஞ்சிகுடி இராசமாணிக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு. சுகுணன், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட போக்குவரத்து பரீட்சகர் பாரூக், பிரதேச சபைச் செயலாளர் எஸ். குபேரன், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சனத் நந்தலால், களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொறுப்பதிகாரி, ஆர்.எம்.எஸ்.சீ. ரத்நாயக்கா மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர் வீ. பற்றீக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சுமார் 200 மேற்பட்ட சாரதிகள் கலந்து கொண்டு பயன் பெற்றதுடன் அவர்களுக்கு வீதி விபத்து பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் அதிதிகளால் எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுமார் 200 மேற்பட்ட சாரதிகள் கலந்து கொண்டு பயன் பெற்றதுடன் அவர்களுக்கு வீதி விபத்து பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் அதிதிகளால் எடுத்துரைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment