30 Sept 2017

கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயங்கள் மற்றும் பிரதிப் பணிப்பாளர் காரியாலயம் திறந்து வைப்பு.

SHARE
கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கால்நடை அபிவிருத்தித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் காரியாலயம் மற்றும் சம்மாந்துறை, கல்முனைப் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயங்கள் என்பன திறந்து வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (29) கால்நடை அபிவிருத்தித் திணைக்கள கிழக்கு மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் பாஃசி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில்; கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், மாகாணசபைப் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாணசபை உறுப்பினர் ஆரிஃ சம்சுதீன், விவசாய அமைச்சின் செயலாளர் கே. சிவநாதன், கால்நடை அபிவிருத்தித் திணைக்கள மாவட்ட பிரதிப் பணிப்பாளர்கள், பிரதேச கால்நடை வைத்திய அதிகாரிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சின் கால்நடை வளர்ப்பாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக பிரதேசங்கள் தோறும் கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயங்கள் அமைக்கும் செயற்திட்டத்தின் கீழ் மேற்படி பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயங்கள் புதிதாக அமைத்து திறந்து வைக்கப்பட்டன.

இதன்படி சம்மாந்துறையில் 08 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயமும், கல்முனையில் 12 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கொத்தணி முறையிலான கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 21 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மாவட்ட பிரதிப் பணிப்பாளர் காரியாலயமும் வெள்ளிக்கிழமை (29) தினம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



SHARE

Author: verified_user

0 Comments: