நல்லாட்சி அரசாங்கம் படித்து பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கும் அதனை விடக் கூடிய கல்வித் தரம் உள்ளவர்களுக்கும் மட்டுமே வேலைவாய்ப்புக்களை வழங்குவதைப்பற்றிச் சிந்திக்காமல் சாதாரண கீழ் நிலைத் தொழிலாளர்களுக்கும் வேலை வழங்கும் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பாக தான் ஐக்கிய தேசியக் கட்சிச் செயலாளரும் அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சருமான (முயடிசை ர்யளாiஅ - ஆinளைவநச ழக Pரடிடiஉ நுவெநசிசளைந னுநஎநடழிஅநவெ) கபீர் ஹாஸிமிடமும் நேரடியாக எடுத்துக் கூறியிருப்பதாகவும் குருகுலசிங்கம் கூறினார்.
இது விடயமாக திங்கட்கிழமை 25.09.2017 ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்@ பட்டதாரிகளுக்கு மட்டும்தான் வேலைவாய்ப்பு என்று திட்டங்களை வகுக்கத் துவங்கினால் மற்றைய தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை என்னாவது என்பதுபற்றி எல்லோரும் சிந்திக்க வேண்டும்.
கல்வியில் சாதாரண தரம், மற்றும் உயர் தரம் படித்து சித்தியடைந்தவர்களும் சித்திiயாதவர்களும் அதற்குக் கீழ் நிலையில் உள்ளவர்களும் என பல்லாயிரம் மனித உழைப்பாளிகள் உள்ளார்கள்.
இவர்களது மனித வளத்தையும் இந்த நாடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கீழ் நிலைத் தொழிலாளர்களுக்கான தொழிற்பேட்டைகள், தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும்.
குறிப்பாக விவசாயம், மீன்பிடி, கட்டிட நிருமாணம், கைத்தொழில்களைக் கொண்ட எத்தனையோ வளங்களைப் பயன்படுத்தித் தொழிற்சாலைகளை உருவாக்க முடியும்.
கீழ் நிலைத் தொழிலாளர்களுக்கும் தொழில்வாண்மை உள்ளது.
நமது சாதாரண தொழிலாளர்களையும் அவர்களது பெறுமதி மிக்க மனித வளங்களையும் நாம் புறக்கணித்து விட்டதனால் அவர்கள் தற்போது மத்திய கிழக்குக்கும் ஏனைய நாடுகளுக்கும் கூலித் தொழிலாளர்களாகப்; படையெடுக்கிறார்கள்.
அதேவேளை கிராமப்புற இளைஞர் யுவதிகள் கொழும்பு போன்ற நகரங்களுக்குச் சென்று கஸ்டப்பட்டு வேலை செய்கிறார்கள்.
இதனால் கிராமப் புறங்களில் இப்பொழுது இளையவர்களைக் காண முடிவதில்லை.
ஏழை அப்பாவிப் பிள்ளைகள் கொழும்புக்குச் சென்று தொழிற்சாலைகளில் கூலி வேலை செய்து விட்டு டெங்கு நோய் தொற்றிக் கொண்டும் வருகின்றார்கள்.
இதனை ஐக்கிய தேசியக் கட்சியும் நல்லாட்சி அரசும் விரைவாக கவனத்தில் எடுத்துத் திட்டங்களை வரைய வேண்டும்.
இல்லாவிட்டால் இந்த நாடு கீழ் நிலைத் தொழிலாளர்களினதும் அவர்களது குடும்பங்களினதும் நம்பிக்கையை இழக்க வேண்டி வரும்.
0 Comments:
Post a Comment