மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குப்பட்ட அதிகஷ்ட்ட எல்லைப்புறப் பாடசாலையான காக்காச்சிவட்டை விஷ்னு மகாவித்தியாலயத்தில் திங்கட் கிழமை (18) கல்விப் பொதுத்தர உயர்தரக் பிரிவு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பட்டது. அப்பகுதி மக்கள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரனிடம் விடுத்த வேண்டுகோளிற்கு இணங்க அவரது முயற்சியினால் இந்த உயர்தர கல்விப் பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்படசாலையில் 1996 ஆம் அண்டு கல்வி பொதுதர சாதாரணதரம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இப்பாடசாலையில் கல்விப் பொதுத்தர சாதாரணதரம்வரைக் கற்ற மாணவர்கள் உயர்தரம் கற்கும் வசதிவாய்ப்புக்கள் இன்மையினால் பல மாணவர்கள் தமது கற்றலை இடைநிறுத்தியுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் தற்போது இப்பாடசாலையில் உயர்தர கல்விப் பிரிவு ஆரம்பிக்கப் பட்டுள்ளமையானது. அப்பகுதிவாழ் மாணவர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக அப்பகுதிவாழ் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment