5 Sept 2017

முச்சக்கரவண்டி மின்கம்பத்தில் மோதி மூவர் படுகாயம்

SHARE
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு- கல்லடி மணிக்கூட்டுக் கோபுர சந்தியில்  
முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதுண்டதில் அதில் பயணித்த மூவரும் படுகாமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை 05.09.2017 அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் மட்டக்களப்பு புன்னச்சோலை –குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இளைஞர்கள் கொக்கட்டிச்சோலை ஆலயத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதிமருங்கிலிருந்த மின்கம்பத்துடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியும் பலத்த சேதமடைந்துள்ளது.

காத்தான்குடி பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.


SHARE

Author: verified_user

0 Comments: