25 Sept 2017

சிறுவர்கள் அவர்கள் எந்த மதமாக, பிரிவாக இருந்தாலும் நாம் அவர்களைப்பற்றி அக்கறை எடுக்கின்றோம் யூ.எஸ்.எயிட் பிரதிநிதி கலாநிதி அன்ரூவ் சிஸன்

SHARE
சிறுவர்கள் அவர்கள் எந்த மதமாக, இனமாக, பிரிவாக இருந்தாலும் அந்தப் பின்னணி பற்றி இல்லாமல் நாம் சிறுவர்கள் என்ற நலனில் மாத்திரம் அக்கறை எடுக்கின்றோம் என யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பணிக்குழுத் தலைவர் கலாநிதி அன்ரூவ் சிஸன் (Dr. Andrew Sisson, USAID-Mission Director for SriLanka and Maldives) தெரிவித்தார்.
யூ.எஸ்.எயிட் நிறுவனத்தினால் உதவியளிக்கப்படும் திட்டங்களைப் பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்திருந்த அவர் திங்கட்கிழமை 25.09.2017 மட்டக்களப்பு மென்கபெப்MENCAFEP (Mentally Handicapped Children and Families Educational Programme ) மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு நிலையத்திற்கு விஜயம் செய்தார்.

நிகழ்வுகளைப் பார்வையிட்ட பின்னர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்இலங்கையில் உள்ள சிறுவர்கள் மீது நாம் அக்கறை கொண்டுள்ளதால் அவர்களது நலன்சார்ந்த பல்வேறு திட்டங்களை அமுல்படுத்துவதற்கு உதவி ஒத்தாசைகளை அளித்து வருகின்றோம்.

ஆனால், சிறுவர்கள் அவர்கள் எந்த மதம், இனம், மொழி, ஆற்றல் கொண்டவர்கள் என்ற எந்தப் பின்னணியையும் நாம் கவனிப்பதில்லை.
எங்களது பார்வையில் சிறுவர்கள் சிறுவர்கள்தான். அத்தகையவர்களுக்கு சமவாய்ப்புடன் வாழ்வதற்கான உரிமையை அங்கீகரிக்க வேண்டும். அதற்காக நாம் பாடுபடுகின்றோம்.” என்றார்.






SHARE

Author: verified_user

0 Comments: