25 Sept 2017

நவகிரிப் பிரிவில் 2300 ஏக்கர் பெரும்போக வேளாண்மை செய்ய தீர்மானம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் நவகிரி பிரிவு பெரும்போக வேளாண்மைச் செய்கைக்கான ஆரம்பக்கூட்டம் சனிக்கிழமை (22) வெல்லாவெளி காலாசார மத்தியநிலையத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்கண்டு நடராசா, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம், உள்ளிட்ட ஏனைய திணைக்களத் தலைவர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது 2017 ஆம், 2018 ஆம் அண்டுக்கான பெரும்பொக வேளாண்மைச் செய்கை தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இப்பகுதியில் மானாவாரி, சிறுநீர்ப்பாசனம், பெருநீர்ப்பாசனம், அடங்கலாக 2300 ஏக்கரில் வேளாண்மைச் செய்கைபண்ணுதல், விதைப்பு ஆரம்பம் 20.10.2017 இலும், விதைப்பு முடிவு 05.11.2017 இலும், காப்புறுதி செய்யும் கடைசித்திகதி 05.11.2017, முதல் நீர் வினியோகம் தேவையின் அடிப்படையில் குளத்தின் நீர்மட்டத்தைப் பெறுத்தும், நீர் வினியோக கடைசித்திகதி 05.02.2018 இலும், அறுவடை கொண்டு செல்லும் முதல்திகதி  05.02.2018, அறுவடை கொண்டு செல்லும் கடைசித்திகதி 28.02.2017, கால்நடைகள் அகற்றப்படவேண்டிய திகதி 15.09.2017, வாய்க்கால் துப்பரவு செய்யவேண்டிய கடைசித்திகதி 20.09.2017  எனவும்.

ஒரு ஏக்கர் 4 உழவு செய்வதற்கு 4000 ரூபாவும், காவல் குடிசை ஒன்றுக்கு 700 ரூபாவும், காவலாளி ஒருவருக்கு நாட்கூலி 1000 ரூபாவும், வேலையாள் ஒருவருக்கு நாட்கூலி 1000 ரூபாவும், வாய்க்கால் துப்பரவு செய்யாதவர்களுக்கான தண்ணப்பணம் பாகம் ஒன்றிற்கு 300 ரூபாவும், வட்டைச் சுதந்திரம் ஏக்கருக்கு அரைப் புசல், ரயர் இயந்திர அறுவடை ஒரு ஏக்கருக்கு 4000 தொடக்கம் 4500 ரூபாவும், சங்கிலி இயந்திர அறுவடை ஏக்கருக்கு 5000 தொடக்கம் 5500 ரூபாவும், என தீர்மானிக்கப்பட்டன.

இப்போகதில் சிபார்சு செய்யப்பட்ட நெல்லினங்களாக இரண்டரை மாத நெல்லினங்கள் பி.ஜி 350, பி.ஜி 257.

மூன்று மாத நெல்லினங்களாக பி.ஜி 310, பி.ஜி 300, பி.ஜி 305, பி.ஜி 306, ஏ.ரி 307, ஏ.ரி 308

மூன்றரை மாத நெல்லினங்களாக பி.ஜி 360, பி.ஜி 370, பி.டப்ளியு 367, பி.ஜி 97-1 , பி.ஜி 352 , பி.ஜி 357 , பி.ஜி 358, பி.ஜி 366, ஏ.ரி 353, ஏ.ரி 353, எனவும்,

விவசாயிகளின் நன்மை கருதி இப்பகுதியிலுள்ள காட்டு யானைகளை அப்புறப்படுத்தும் முகமாக அடுத்தவாரம் மட்டக்களப்பு கச்சேரியில் விசேட கூட்டம் ஒன்றை நடாத்தி தீர்வுகாணுதல்.

மண்டூரில் அமைந்துள்ள வன ஜீவராசிகள் காரியாலயத்தை செல்வாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பொதுக் கட்டடத்திற்கு மாற்றுதல்.

காட்டு யானைகளினால் பாதிப்படைந்து நட்டஈடு கிடக்காத விவசாயிகளுக்குரிய நட்ட ஈட்டினைப் பெற்றுக்கொடுத்தல்.

காப்புறுதி செய்த விவசாயிகள் அவர்களது வேளாண்மைச் செய்கை பாதிக்கப்பட்டால் அதனை 14 நாட்களுக்குள் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தல்.

கடந்த வருடம் பாதிப்படைந்து இதுவரை நட்டஈடு பெறாத விவசாயிகளுக்கு விரைவில் அவர்களுக்குரிய நட்ட ஈட்டுத் தொகையை பெற்றுக்கொடுத்தல்.

கனிய வளங்கள் திணைக்களம் இப்குதியில் மண் அகழ்வுக்கு அனுமதி வழங்காமல் மண்ணால் மூடப்பட்டுக் கிடக்கும் குளங்கள் மற்றும் ஆறுகளை அடையாளம் கண்டு அங்குள்ள மண்ணை அகழ்தல். உள்ளிட்ட பல தீர்மானங்கள் இதன்போது நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.













SHARE

Author: verified_user

0 Comments: