20வது திருத்த சட்டம் கிழக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டதாக வெளியான செய்தியை மறுத்துள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக்,கிழக்கு மாகாணசபையில் 20வது திருத்த சட்டம் கொண்டுவரப்படவும் இல்லை,நிறைவேற்றப்படவும் இல்லையென தெரிவித்தார்.
அரசாங்கத்தின் முன்வைக்கப்பட்டுள்ள 20வது திருத்த சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தம் தொடர்பிலேயே கிழக்கு மாகாணசபையில் முன்வைக்கப்பட்டு அது வாக்கெடுப்புக்கு கொண்டுசெல்லப்பட்டு வெற்றிபெற்றதாகவும் 20வது திருத்தம் கொண்டுவரப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,காத்தான்குடியில் உள்ள அவரது அலுவலகத்தில் திங்கட்கிழமை இரவு நடைபெற்று செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
20வது திருத்தம் கொண்டுவரப்பட்டால் அதனை தான் எதிர்ப்பதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இணைந்து முன்வைத்துள்ள திருத்தம் சட்டமா அதிபரினால் உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சட்ட மூலம் திருத்தப்பட்டு கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவளிக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
20வது திருத்த சட்டம் ஒன்றை கொண்டுவரக்கூடாது.அதன் ஊடாக பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தினை தடுத்து அதனைக்கொண்டு தேர்தல்களை மையப்படுத்தியதாக அரசியல் செய்யவேண்டும் என்று மகிந்த ராஜபக்ஸ அணியினர் மிகவும் தீவிரமாக செயற்பட்டுவருகின்றனர்.
இதனை மிகவும் கச்சிதமாக காய்நகர்த்தவேண்டிய தேவைப்பாடு எமக்குள்ளது. ஆட்சிமாற்றம் ஏற்பட்டதன் பின்னர் முழுக்க முழுக்க புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவது தொடர்பில் நாங்கள் பேசிக்கொண்டுள்ளோம்.இந்த அரசியல் யாப்பு உருவாக்கம் நடைபெறக்கூடாது என்பதில் மகிந்த ராஜபக்ஸ குழுவினர் செயற்பட்டுவருகின்றனர்.
இதற்கு சிறுபான்மை சமூம் சோரம்போககூடாது என்பதில் சிறுபான்மை சமூகத்தின் இரண்டு பெரும்பான்மை கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் மிகவும் நிதானமான போக்கில் இதனை கையாண்டுவருகின்றது.புதிய அரசியல்யாப்பு உருவாக்கத்தில் 20வது திருத்த சட்டம் செல்வாக்கு செலுத்தும்.
20வது திருத்த சட்டத்தில் நாங்கள் சில முன்மொழிவுகளைக்கொண்டுவந்து திருத்தங்களை மேற்கொண்டுவருகின்றோம்.
இது தேர்தலுக்காக செய்யும் ஒரு விடயமல்ல.20வது திருத்த சட்டத்தினை எதிர்க்கவேண்டும் என பலர் என்னிடம் கூறினார்கள்.நாங்கள் நிதானமான போக்குடனேயே சில விடயங்களை செய்யவேண்டும்.
20வது திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதனை நாங்கள் முழுமையாக எதிர்த்தோம்.மாகாணசபைகளின் அதிகாரங்களை பாராளுமன்றம் இழுத்துச்செல்லும் வகையில் இருந்தது.அது நீக்கப்பட்டதன் பின்னரே புதிய அரசியலமைப்பு யாப்பு உருவாக்கத்திற்கு வழியை ஏற்படுத்தும் என்ற காரணத்திற்காக மாத்திரம் திருத்தங்களை அதில் முன்மொழிந்தோம்.
0 Comments:
Post a Comment