மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மாவட்ட சிவில் அமைப்புக்களின் சம்மேளனம் இணைந்து இந்த கவனயீர்ப்பு பேரணி மற்றும் போராட்டத்தினை நடாத்தியது.மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் திருப்பெருந்துறை திண்மக்கழவு முகாமைத்துவ நிலையத்தில் கொட்டப்பட்டுவந்த நிலையில் அண்மையில் அங்கு பாரிய தீவிபத்து ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து திருப்பெருந்துறை திண்மக்கழவு முகாமைத்துவ நிலையத்தில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்துமாறு கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களை மேற்கொண்டுவந்த நிலையில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றிலும் குறித்த பகுதி மக்களினால் வழக்கு தொடரப்பட்டது.
அதனடிப்படையில் குறித்த திருப்பெருந்துறை திண்மக்கழவு முகாமைத்துவ நிலையத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் குப்பைகள் கொட்டுவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் இரண்டு வாரங்களாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாத காரணத்தினால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு நகரத்தில் பல்வேறு பகுதிகளிலும் குப்பைகள் கொட்டும் இடமாக மாற்றப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் குப்பைகளை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கையினை ஏடுக்ககோரி திங்கட் கிழமை இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து நகர் ஊடாக ஊர்வலமாக சென்று மட்டக்களப்பு மாநகர ஆணையாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment