மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் அகிம்சா எனும் சமூக சேவை தொண்டர் நிறுவனம், கல்வியில் சிறந்து விளங்கும் மிகவும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களைத் தெரிவு செய்து அவர்களின் கற்றலுக்கு உதவி செய்து வருகின்றோம்.
இம்மாவட்டத்திலுள்ள மிகவும் கஸ்ற்றப்பட்ட 1000 மாணவர்களின் கற்றலுக்கு நாம் உதவிகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளோம். என மட்டக்களப்பு அகிம்சா சமூக நிறுவனத்தின் ஆலோசகர் த.வசந்தராசா தெரிவித்தார்.
மேற்படி நிறுவனத்தினூடாக மண்டூர், மற்றும், தேற்றாத்தீவு ஆகிய இடங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மிகவும் கஸ்றநிலையிலிருந்து கல்விப் பொதுத்தர உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும், 2 மாணவிகளுக்கு தலா 12000 ரூபா பெறுமதியான காசோலைகளும், முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவி ஒருவரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கடை ஒன்று அமைப்பதற்காக 33000 ரூபா பெறுமதியான காசோலையும் வழங்கி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (24) மட்டக்களப்பிலுள்ள அகிம்சா நிறுவனத்தின் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்டு மேற்படி உதவிகளை வழங்கி வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்…..
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் எமது உறவுகள் வழங்கி வரும் உதவிகளைப் பெற்றே நாம் இங்குள்ள மக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம். இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று மிகவும் கஸ்ற்றப்பட்டு தொழில்புரிந்து சேர்த்தெடுக்கும் பணத்தில் ஒரு பகுதியை இங்குள் மக்களின் கல்வி, மற்றும் வாழ்வாதார செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு அனுப்புகின்றார்கள். இவ்வுதவிகளைப் பெறுபவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன்மூலம் தமது கற்றலை மேம்படுத்தும் மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும், மிளரவேண்டும். எமது அகிம்சா சமூக நிறுவனத்தின் இந்த செயற்பாடுகளுக்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை, மக்கள் சக்தி அமைப்பு உள்ளிட்ட அமைப்புக்களும் அவர்களது ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றார்கள்.
எனவே எமது மக்களுக்காக உதவிகளை நல்கிக்கொண்டிருக்கும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளுக்கு நாம் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment