வடக்கு கிழக்கில் நடந்த போரில் காணமல் போனவர்களின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் போர்க்கால விதவைகளின் ஆற்றல்களை மேம்படுத்தல் தொடர்பாக தனியார் துறை, அரசாங்கம், ஊடகம் மற்றும் சிவில் சமூகம் மற்றும் பாலினம் தொடர்பான அமைப்புக்கள் ஆகியவற்றின் ஊடாக அரசாங்கத்திடம் முன்வைக்கும் வகையில் பல நிறுவனர்கள் தமது பணிகளினை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் மனோநிலை ஒவ்வொருக்கொருவர் வித்தியாசமானதாக காணப்படுகின்றது. இனியொருயுத்தம் வேண்டாம் நிம்மதியான வாழ்கையே வேண்டும் என பலர் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
அந்த வகையில் ஆண்டான்குளத்தைச் சேர்ந்த கௌசலா அக்கினேஸம்மா 47 வயது விதவை தாய் தனது சொந்த முயற்சியால் வேளாண்மை செய்து தனது வயலில் பலரை வேலைக்கமர்த்தி வாழ்கையில் வெகுவாக முன்னேறி தனது பிள்ளையையும் படிப்பித்துள்ளார். அக்கினேஸம்மா தனது சோக கதையையும் தனது பயங்கர அனுபவத்தையும் வாழ்கையின் வெற்றி இலக்கையும் தெரிவிக்கையில்
“எங்கள் வீட்டில் நான்கு சகோதார்கள், நான்கு பேரும் பெண் பிள்ளைகள.; அப்பா குளம் மண்வெட்டிதான் எங்களை காப்பாற்றினார். நான்; உயர்தரம் வரை படித்திருக்கிறேன். எனக்கு 46 வயது, விரும்பி திருமணம் செய்துக் காண்டேன். அவர்கள் சார்பாக வயல் நிலம் தந்தார்கள். கணவர் அவ்வளவாக படிக்கவில்லை. நெல்மூடை ஏற்றிதான் எங்களை காப்பாற்றினார்;.எனக்கு ஒரு மகள் இப்போ மகளுக்கு 15 வயது. போர் நேரம். மடு கிளிநொச்சி போன்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்தோம். முல்லைத்தீவு வலைஞர்மடத்திற்கு பயப்பாதையாக சென்றோம். அங்கு இருக்கும் போதுதான் யுத்தம் உக்கிரமாக இருந்தது ஆமியின் ;கட்டுப்பாட்டிற்கு செல்ல கஷ்டமாக இருந்தது. ஆனால் முயற்சிசெய்தோம். மாதா கோயிலடியில் உள்ள காட்டிலில் தான் வசித்தோம். ஒருநாள் 2009 இறுதியுத்தத்தில் இரவு செல் விழுந்தது. நாங்கள கோயிலில் இருந்தோம். செல் எங்கயோ விழுந்து என் கணவனின் நெஞ்சில் விழுந்தது. என்னால் அவரை பார்க்க போகமுடியவில்லை. அங்கு துப்பாக்கிதாக்குதல் இடம்பெற்றது.
என் அக்காவின் கணவர் ; இரவே அவரை மாத்தளான் என்ற இடத்தில வைத்தியசாலைக்கு கொண்டு செல்றார். 23 ஆம் திகதி என்னோடு இருந்தவர்கள். என் கணவனை வைத்தியசாலைக்கு சென்றுபார்க்குமாறு சொன்னார்கள்.என் அம்மாவும் அப்பாவும் என்மகளை பார்த்துக்; கொண்டார்கள். நான் அம்புலன்ஸ் ஒன்றில் ஏறி செல்லப்பார்த்தேன். ஆனால் என்னை அதில் ஏற்றிச் செல்ல மறுத்தனர். அந்தவேளையில் எனது தூரத்து சொந்தக்காரர ஒருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஏற்றிச்சென்றார்.
அந்த நேரம், வைத்தியசாலைக்கு செல்விழுந்து நிறைய சடலங்களை குப்பைவாரியால் எடுத்துக்கொண்டு இருந்தனர். என் கணவனை எப்படியாவது தேடிச்சென்றேன். அப்போது என் கணவர் ஒரு மணல்திடலில் விழுந்துகிடக்க குடிக்க ஏதாவது தருமாறு கேட்டார். பிளேன்டி வாங்கி வந்தேன். வாங்கிவரும் போது இரத்தத்தில் வழுக்கிவிழுந்தேன். எனக்கு பிளேன்டியை கொடுக்க முடியவில்லை. அவர் இரத்தவாந்தி எடுத்தார். அவருக்கு ஏலாமல் இருந்தது. அந்தநேரம் வந்து கப்பலில் ஏற்றி சிகிச்சை செய்ய பதிந்தனர்.
பின்னர் என் மகள் எங்கே என்று கேட்டார். என்னை தூக்கு மாறுகேட்டார். பசியால்; இருந்தபடியால் என்னால அவரைதூக்க முடியவில்லை. கஷ்டப்பட்டு என்மேல் அவரை சாய்த்தேன். பின் தண்ணீர் கேட்டார். உலத்திக் கொண்டே இருந்தார். கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் கொடுத்தேன். இளையான் நிறைய அவரை மொய்த்தது. நான் இளையான் விரட்டி விரட்டி இருந்தேன்.கொஞ்சம் தண்ணீர் கொடுத்தேன் இலேசாக சாய்ந்தார். நித்திரை கொள்ளாமல் இருந்ததால் ;நான் அவர் நித்திரை செய்கிறார் என எண்ணி இருந்தேன்.அப்போது என் மச்சான் ;வந்தார்; அவருக்கு விடயத்தை சொன்னேன். அவர் வந்துபார்க்கும ;போது அவர் இறந்துவிட்டார். பின்னர் அவரது உடலை புலிகளின் உதவியால் நாங்கள் ;இருந்த கோயிலுக்கு கொண்டுசென்றோம் மதகுருவின உதவியோடு இறுதி சடங்கு செய்யதீர்மானித்தோம்;. தந்தையின் சடலத்தை பார்க்க என ;மகள் மறுத்தாள்.எப்படியாவது பார்க்க செய்தேன். அவள் கத்தி அழுதாள்.பின்னர் அவரை இழுத்துக் கொண்டு சென்று மண்குழியில ;போட்டோம். பின் அந்த இடத்தில் இருக்க முடியாமல் போனது. பசியால் மக்கள் இறந்தனர். இராணுவத்திடம் செல்ல என் உறவினர்களோடு முயற்சித்தேன். இயக்கத்தினால் 2 தடவைபிடிபட்டோம். இயக்கம் எங்களை ஒருபள்ளி கூடத்திற்கு கொண்டு சென்றனர். அதில் நானும் ;மகளும் மட்டும் தான் இருந்தோம். யாரும் இருக்கின்றார்களா என்று கூப்பிட்டோம்.ஆனால் யாரும் வரவில்லை.நான் மகளை காப்பாற்றிக் கொள்ள ஒருபனைக் குற்றியில் மகளின் தலையை செலுத்தி உடலை என் உடலால் மூடினேன். செல் வந்து விழுந்தது மண் எல்லாம் எங்களை மூடியது. முகள் மூச்சினுள் மண்சென்று மூச்செடுக்க கஷ்டப்பட்டேன்.
பின்னர் மகளை இடுப்பில் கட்டிக்கொண்டு பாடசாலைக்கு வெளியே சென்றோன்;. பக்கத்தில் இருந்த பங்கரில் நிலைத்தோம். அந்தபங்கரில் இருந்து இயக்கம் செல் அடித்துக் கொண்டிருந்தது. பின்னர் இருந்த பங்கர் எல்லாவற்றிற்கும் செல்அடித்தான். ;.எங்கள் பங்கர மட்டும் தப்பித்தது. ஆனால் ஒரே இருளாக இருந்தது. எப்படியாவது பங்கரில ;இருந்து வெளியேவந்தோம். வெளியே இயக்கம் உடையுடனும், இராணுவ உடையுடனும் இருந்தனர் பின்னர் இயக்கம் எங்களை கடலுக்கு கொண்டு சென்றது மிகவும் சிரமத்தோடு இராணுவத்தோடு சேர்ந்தோம்.
இராணுவம் உணவுதரவில்லை. பனிஸ்பிஸ்கட் எல்லாம் வீசுவார்கள் அதை பிடிப்பவர்களுக்குத்தான் உணவு. தண்ணீர் தாகத்திற்கு குட்டைகளில் கலங்க இருந்த நீரை குடித்தோம்.
பிpன்னர் இராணுவம் ஒரு காட்டுக்குள் உள்ள முகாம் ஒன்றினுள் விட்டார்கள். அங்கிருந்து வவுனியா தமிழ் மகாவித்தியாலத்திற்கு விட்டார்கள். அங்கு கம்பிவேலிகளூடாகதான் ;உறவினர்களோடு கதைக்கலாம். கடும்வெயில் நீர்வசதியும் இல்லாமல் இருந்தோம்.பின் சிலநாட்களில் எங்களை வீடுகளுக்கு அனுப்பப ;போவதாககூறினார்கள். அப்போது சந்தோசமடைந்தோம். ஆனாலும் என்கணவர ;இல்லாதஅந்த வீட்டிற்கு செல்ல கவலையாக இருந்தது.
பின்னர் ஒவ்வொரு பிரிவாக எங்கள் கிராமங்களுக்கு வந்துசேர்ந்தோம். எமது வீட்டைச் சுற்றிகாடாக இருந்தது. நாங்கள் சின்னகொட்டில் ஒன்றை அமைத்து வாழ்ந்து வந்தோம். வந்த பின்னர் என் கணவனின் நினைவு பொருட்களை காணும் போது துக்கமாக இருந்தது.
பின்னர் கொஞ்ச காலம் ;என சகோதரியின் அரவணைப்பால் வாழ்ந்துவந்தோம். பின்னர ;நானே என் வாழ்க்கையை உயர்த்த யோசித்தேன். ஊரவர்களின் உதவியோடு வேளாண்மை செய்ய ஆரம்பித்தேன். பல நிறுவனங்கள் என் மகளின் கல்விக்கு உதவினார்கள். முதல் வேளாண்மையால் கிடைத்த பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு அந்த பணத்தை பின்னர் அடுத்த வேளாண்மை செய்யபாவித்தேன். பின்னர ;சிலரை வைத்து கூலி கொடுத்து வேளாண்மை செய்துவந்தேன்.
முதல் வேளாண்மை குறைவாக இருந்ததால் இலாபம் இருக்கவில்லை. எனவே மேலதிக கடனாளியாக இருந்தேன். பின் பலரின் ஆலோசனைப்படி தொடர்ந்து விவசாயம் செய்ய தொடங்கினேன். பின்னர் நெல்விலையும நல்லா இருந்தது. அந்தபணத்தைக கொண்டு மகளின் பெயரில் ஒரு வங்கிகணக்கை ஆரம்பித்தேன்.பின்னர் அருகில் உள்ள கடைகளுக்கு வடை பெடிஸ் என காலை உணவு போன்றவற்றைவிற்று அந்தபணத்;தையும் மகளின் கணக்கில் போட்டுவந்தேன்.அத்தோடு தொடர்ந்து விவசாயம் செய்துவந்தேன். சிறுதொகை கடனும் ;எடுத்தேன்.கடைசியாக செய்த வேளாண்மையால் நல்ல இலாபம் கிடைத்தது.அந்த உழைப்பின பயனாக வீட்டுத்திட்டத்தின் மூலம் கிடைத்த வீட்டை இன்னும் அபிவிருத்தி செய்துவருகிறேன்.
நிறைய யோசிக்கிற படியால் எனக்கு மந்தகுணம் உள்ளது. சில விடயங்களை கெதியாக மறந்து விடுவேன். யுத்தத்தின் தாக்கம் இப்போதும ;உள்ளது. மகளும் பயப்படுவாள்.அவள் பயந்த சுபாவம் கொண்டவள். நான் அறிவுரை கூறுவேன். எதிர்காலத்தைப் பற்றி சொல்வேன்.
மகள் 3 பேருக்கு வகுப்பு எடுக்கிறோர்;. அப்பா இல்லாத பிள்ளை என்று பாடசாலையில் குறிப்பிட்டு சொல்லும் போதுமனம் கலங்கினேன். தற்போது நன்றாக உழைத்து சொந்தகாலில் நின்று வாழ்வதால் சந்தோசமாக இருக்கின்றோம்.
இப்போது இருக்கும் சமூகம் ஒரு சீரழிந்த நிலையில காணப்படுகின்றது.விதவைகள் என்ற பெயரில ஒதுக்கப்படுகின்றோம். பாதுகாப்பு அயலவர்கள் வருவார்கள்.கடவுள் நம்பிக்கையோடு வாழ்கிறோம். தற்கால இளைஞர்கள் திரைப்படங்களில உள்ளவற்றைபார்த்து உண்மையாக அனுபவிக்கப்பார்க்கின்றார்கள். தொலை பேசி தொலைக்காட்சி போன்றவற்றால் சீரழிந்த நிலையில் உள்ளது” என்றார்.
மன்னாரை சேர்ந்த அ.பரமேஸ்வரியும் இடப்பெயர்வு வாழ்க்கை தொடர்பான அனுபவத்தை பகிந்துக்கொண்டார்.
“எனது பெயர் அ. பரமேஸ்வரி. நான் 1970 மே மாதம் 8 ஆம் திகதி அடம்பனில் பிறந்தேன். எனது அப்பா விவசாயம் செய்து வந்தார். எனக்கு 9 சகோதர சகோதரிகள். எனது அம்மா நான் சிறுவயதில் இருக்கும் போதே புற்றுநோய் காரணமாக இறந்து விட்டார். அம்மா இறந்த பின்பு எனது தந்தை என்னையும் சகோதரர்களையும் பார்த்து வந்தார். என் சகோதரி திருமணம் முடித்த பின்னர் என்னை அவரோடு அழைத்துச் சென்றார்.பாடசாலைக்கு அனுப்பி பராமரித்து வந்தார். நான் கோயில் குளம் இந்துக் கல்லூரியில் 5ஆம் தரம் வரை கல்வி கற்றேன்.
பின்னர ;என் தந்தை எங்கள் சொந்த இடமான அடம்பன் இத்திக்கண்டலுக்கு கூட்டிக்கொண்டு வந்தார். எனது ஒரு சதோரன் யுத்தத்தின் போது இராணுவம் சுட்டு இறந்து விட்டார். அவர் இறக்கும் போது அவருக்கு 35 வயது. அப்போது அவருக்குத் திருமணமாகி 3 பிள்ளைகள் இருந்தனர்.
நான் 1987இல் எனக்கு18 வயது, காதல் திருமணம் செய்து கொண்டேன். எனது கணவன் கடற்றொழில் செய்து வந்தார். புத்தளத்தைச் சேர்ந்தவர். எனக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இரண்டு ஆண் பிள்ளைகளும் 2 பெண் பிள்ளைகளும்.
முதல் முதலில் 1990இல் இடம்பெயர்ந்து மன்னார் எருகலப்பிடியில் இருந்தோம். பின் 1990 இறுதியில் அடம்பன் இத்திக்கண்டல்pல் இருந்தோம். பின் 1992இலிருந்து 1994 வரை தட்சனாமடு முகாமில் இருந்தோம். இடம்பெயர்ந்து இருந்த காலத்தில் யு.என்.சி.ஆர் நிறுவனம் தளபாடங்கள் தந்து உதவியது. பின் அரசாங்கத்தினால் நிவாரண உதவிகள் கிடைத்தன.
பின்னர்1996 இல் இத்திக்கண்டலுக்கு வந்தோம். பின் இறுதி யுத்தத்தின் போது மீண்டும் மடுவுக்கு போனோம். பின் திரும்பவும் சொந்த இடத்திற்கு வந்தோம். பின் 2006இல் இராணுவக் கட்டுப்பாட்டில் உயிலங்குளம் முகாமில் இருந்து பின்பு வவுனியாவில் இருந்து, இறுதி யுத்த முடிவில் போது மீள் குடியேறி சொந்த இடத்திற்கு வந்தோம்.
நாங்கள் மீள் குடியேறி வரும் போது எங்கள் நிலம் தரை மட்டமாகி இருந்தது. வீடுகள் உடைந்த நிலையில் இருந்தது. பின் தற்காலிக வீடுகள் அமைக்க தகரம் போன்றவற்றை பல நிறுவனங்கள் தந்து உதவினர். பின்னர் காணிகள் துப்பரவு செய்து காணியில் வாழ்ந்து வந்தோம். பின்னர் 2008இல் வீட்டுத் திட்டம் கிடைத்தது. பின்னர் வீட்டுத் திட்டத்தில் கிடைத்த வீட்டில் வாழ்ந்து வந்தோம்.
இப்பொழுது மாடுகள் வைத்து இருக்கிறோம். கணவர் கடற்தொழில் விவசாயம் போன்றவை செய்கிறார். என் பிள்ளைகளும் வேலை செய்கிறார்கள். இப்பொழுது நிரந்தரமான வீடு வைத்திருக்கிறோம். சந்தோசமாக இருக்கிறோம். எனது கடைசி மகள் விழுது நிறுவனத்தில் வேலை செய்கிறார்.
சமூகத்தில் பாதுகாப்பாக வாழ்ந்து வருகிறோம். முன்பு இருந்த பாதுகாப்பு இப்போது உண்டு. பிள்ளைகளும் படித்து தொழில் செய்கின்றார்கள்.
இயக்கம் இருக்கும் போது பிள்ளைகள் கட்டுப்பாட்டோடு இருந்தார்கள். இப்பொழுது எந்தவித கட்டுப்பாடும் இல்லை. மது அருந்துதல். வீணாக செலவு செய்தல் பிரயாணம் செய்தல் போன்றன அதிகம் காணப்படுகின்றது.
அரசாங்கத்திற்கு சொல்ல எதுவும் இல்லை. நிரந்தரமான சமாதானத்தோடு வாழ விரும்புகிறேன். இனியும் ஒரு யுத்தம் வேண்டாம். இனியும் கஸ்டப்பட நாம் விரும்பவில்லை. சமாதானத்தோடு சுதந்திரமாக வாழ விரும்புகிறேன். தடுப்பில் உள்ள கைதிகளை விடுதலை செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன்”
0 Comments:
Post a Comment