நல்லிணக்க நேய ஊடக செயலமர்வு ஒன்று கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு திங்கட் கிழமை (28) மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள் பிறிஜ் பியூ ஹெட்டலில் இடம்பெற்றது. இதன்போது இழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூவினங்களையும் செர்ந்த 50 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் தேசிய ஒற்றுமைக்கான பாக்கீர் மாகார் நிலையத்தின் தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், கலநிதி.எம்.ரீ.எம்.மஹீஷ், மற்றும், தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது நல்லிணக்கம் தொடர்பான குறுந்திரப்படங்கள் காண்பிக்கப்பட்டதோடு, நல்லிணக்க நெய ஊடகவியலுக்கான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் விளங்கங்ககள் வழங்கப்பட்டு இறுதியில், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உறுதிமொழியையும் ஊடகவியலாளர்கள் எடுத்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment