தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனைவரையும் அரவணைத்துக் கொண்டு, ஒற்றுமையுடன், கூட்டாகச் சென்றால்தான் எமது மக்கள் எதிர் பார்க்கும் தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்களும், மாவீரர்களும் இந்த மண்ணிலே என்ன நோக்கத்திற்காக, என்ன சிந்தனையோடு, இறந்தார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் தியாகங்களை நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் தற்போது முக்கியமான தறுவாயில் இருந்து கொண்டிருக்கின்றோம். இந்த நேரத்தில் ஒருபிரிவினர் பிரிந்து கொண்டு குறைகூறிக் கொண்டிருந்தால் அது எமக்கு ஆரோக்கியமாக இருக்காது.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் (அமல்) தெரிவித்துள்ளார்.
கடந்த 1987 மற்றும் 1991 காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 143 இற்கு மேற்பட்ட பொதுமக்களின் ஞாபகார்த்தமாக மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி திங்கட் கிழை (22) புணரமைப்பு செய்யப்பட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….
மட்டக்களப்பு மாவட்டத்திலே பல விடையங்கள் தற்போது பாரா முகமாகக் கிடைக்கின்றன அவற்றை சிலர் செயற்படுத முன்வரும்போது சிலர் அதற்கு அவர் பெரியவரா, இவர் பெரியவரா, அவருக்கு என்ன தகுதி இருக்கு எனப்பேசுகின்றார்கள் இவ்வாறு கதைப்பவர்கள் அனைவரும் யோக்கியர்கள் போன்று கதைக்கின்றார்கள். மாறாக பாரா முகமாகக் கிடக்கும் தேவைகளை செய்து முடிக்கவும் மாட்டார்கள். எனவே யாரும் உதவி செய்யாவிட்டாலும். உகத்திரம் செய்யாமல் செயற்பட வேண்டும்.
பாடுகொலை செய்யப்பட்ட ஞாபகார்த்த தூபிகளை சரியான முறையில் பேணிப் பாதுகாத்து நாம் அனைவரும் எமது அடுத்த தலைமுறைக்குக் கையளிக்க வேண்டும். இவற்றை விடுத்து வியாக்கியானங்களை மேற்கொள்வது பொருத்தமற்ற நடவடிக்கையாகும்.
புதிய அரசியலமைப்பு ஊடாக நாம் முன்நோக்கிச் சென்று கொண்டிரு;கின்ற இச்சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் இன்னும் ஒன்றுமையைப் பலப்படுத்திக் கொண்டுதான் செல்ல வேண்டும். எதிர் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒரவரை முதலமைச்சராகக் கொண்டுவர வேண்டும். இதற்கிடையில் நீ பெரியவரா, நான் பெரியவரா, நான் நினைப்பதுதான் சட்டம், நாங்கள்தான் எல்லாம் செய்ய வேண்டும், என ஒருபிரிவினர் நடந்தால் அது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் ஏனைய கட்சிகளுக்கோ, அல்லது அக்கூட்டமைப்பிலிருக்கும் அரசியல்வாதிகளுக்குகோ செய்யும் துரோகமல்ல அது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்குச் செய்கின்ற துரோகமாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏதாவது ஒரு கட்சியாவது நாங்கள் வைப்பதுதான் சட்டம், நாங்கள் சொல்வதுதான் மந்திரம், அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள்தான் செய்ய வேண்டும், என நினைத்தால் கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகளுக்குச் செய்தும் துராகமாகாது இவைகளனைத்தும் எமது மக்களையே பாதிக்கும்.
நாங்கள்தான் கிழக்கு மாகாணசபையைக் கைப்பற்றுவோம், நாங்கள்தான் அடுத்த முறையும் கிழக்கில் முதலமைச்சராக வருவேம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றார்கள். எனவே முஸ்லிம் மக்களுக்குள்ளே சரியான ஒற்றுமையும், உறுதியான கருத்துப்பாடும் இருக்கின்றது. மாறாக சிறு, சிறு விடையங்களுக்குள்கூட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமையில்லை, சரியான புரிந்துணர்வில்லை. இந்நிலையில் எவ்வாறு கிழக்கு மாகாணசபையை எதிர் கொள்ளப் போகின்றோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனைவரையும் அரவணைத்துக் கொண்டு, ஒற்றுமையுடன், கூட்டாகச் சென்றால்தான் எமது மக்கள் எதிர் பார்க்கும் தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்களும், மாவீரர்களும் இந்த மண்ணிலே என்ன நோக்கத்திற்காக, என்ன சிந்தனையோடு, இறந்தார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் தியாகங்களை நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் தற்போது முக்கியமான தறுவாயில் இருந்து கொண்டிருக்கின்றோம். இந்த நேரத்தில் ஒருபிரிவினர் பிரிந்து கொண்டு குறைகூறிக் கொண்டிருந்தால் அது எமக்கு ஆரோக்கியமாக இருக்காது என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment