(ஏ.ஹுஸைன்)
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு செப்ரெம்பெர் 1ஆம் வழங்கப்பட்ட விடுமுறை அமுலில் இருக்கும் என்றும் அது இரத்தாகவில்லை என்றும் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
ஹஜ்ஜுப் பெருநாளை அனுஷ்டிக்கும் தினத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற குழப்பத்தில் விடுமுறை தினம் பற்றியும் பேசப்பட்டு வந்ததால் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் ஹஜ்ஜுப் பெருநாளை எதிர்வரும் 2ஆம் திகதி கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதின் பிரகாரம் செப்ரெம்பெர் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொது, வங்கி விடுமுறையாக இருக்கும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அமைச்சின் மேலதிகச் செயலாளர் நீல் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், 2ஆம் திகதி சனிக்கிழமையாக இருப்பதால் அன்றைய தினத்தை விஷேட விடுமுறையாக அறிவிக்க வேண்டிய தேவைப்பாடு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment