வவுணதீவு பொலிஸ் பிரிவின் கீழ் வரும் காஞ்சிரங்குடா, இரும்மண்டகுளம் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் வியாழக்கிழமை மாலை 24.08.2017 ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, ஸ்தலத்திற்குச் செனறு சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் மேற்படி காட்டுப் பிரதேசத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருக்கையில், சந்தேக நபர்களைக் கைது செய்ததாக வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி பி.ரி. நஸீர் தெரிவித்தார்.
புதையல் உள்ளதென கருதப்பட்ட குறித்த இடம் சுமார் 10 அடி ஆளம் வரை தோண்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந் நடவடிக்கையின்போது, மஹியங்கனை கிராந்துருகோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த நால்வரும் கைதாகியுள்ளதுடன் இவர்கள் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய நீர் இறைக்கும் இயந்திரம், பூஜை கழிப்புப் பொருட்கள் உள்ளிட்டவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்களை வெள்ளிக்கிழமை (25.08.1017) மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment