27 Aug 2017

மட்டக்களப்பில் சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 343 பேர் கடந்த ஆண்டு சமுதாயஞ்சார் சீர்திருத்தப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மட்டக்களப்பு சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் கனகசபை சுதர்சன்

SHARE
மட்டக்களப்பில் சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 343 பேர் கடந்த ஆண்டு சமுதாயஞ்சார் சீர்திருத்தப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக மட்டக்களப்பு சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் (Community Correction Officer)     கனகசபை சுதர்சன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக ஞாயிற்;றுக்கிழமை (27.08.2017) மேலும் தெரிவித்த அவர்@ சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்ட சிறு குற்றவாளிகளாக இனங்காணப்பட்டோர் நெறிப்படுத்தப்பட்டு மீண்டும் சமுதாய நீரோட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் நீதி மன்ற உத்தரவின் பிரகாரம் சமுதாயஞ்சார் சமூக நல சிரமதானப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள்.

இவ்விதம் மட்டக்களப்பு நீதிமன்றம் மற்றும் ஏறாவூர் சுற்றுலா சுற்றுலா நீதிவான் நிதிமன்றம் ஆகியவற்றில் சிறுகுற்றவாளிகளாகக் காணப்பட்ட 321 ஆண்களும், 22 பெண்களுமாக மொத்தம் 343 பேர் சமுதாயஞ்சார் சீர்திருத்தப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

இவர்களில், 235 பேர் மதுபான வெறி தலைக்கேறிய நிலையில் குடும்ப, வீட்டு மற்றும் சமூக வன்முறைகளில் ஈடுபட்டோராவர்.

ஏனையோர் பொதுத் தொல்லை, போதைப் பொருள் பாவனை, சட்டவிரோத சாராயம் என்பனவவும் இன்ன பிற சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டோராக இனங்காணப்பட்டுள்ளார்கள்.

மேலும் இந்த சிறு குற்றவாளிகளில் 64 பேர் அறவே பாடசாலை செல்லாதோர் என்றும் 27 பேர் எதுவித தொழிலும் செய்யாமல் வெட்டியாக வீணே காலத்தைக் கழிப்பவர்கள் என்ற விடயமும் தெரிவந்திருக்கின்றது.
ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டில் சமுதாயஞ்சார் சீர்திருத்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட 343 சிறு குற்றவாளிகளில் 328 பேர் விடுவிக்கப்பட்டு தமது குடும்பங்களுடன் இணைந்து கொண்டுள்ளார்கள்.

அதேவேளை குறித்தொதுக்கப்பட்ட மணித்தியாலங்களில் குறிப்பிட்ட சமுதாயஞ்சார் சீர்திருத்தப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாது நீதிமன்றின் கருணையுடன் கூடிய  நல்வழிப்படுத்தலை உதாசீனம் செய்த 15 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நீதிவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜாவின் (Magistrate and Additional District Judge Manikkavasagar Ganesharajah) கரிசனையின்பால்   சமூக மட்ட  சட்ட விரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக  இந்த சிறு குற்றவாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சமூக நெறிப்படுத்தலுக்கான பல்வேறு விழிப்புணர்வூட்டல்கள் இடம்பெற்று வருகின்றன.

சிரமதானப் பணிகளுடன், உளநல ஆற்றுப்படுத்தல் பயிற்சி, ஆன்மீக தியானம், தொழினுட்பப் பயிற்சிகள், புனர்வாழ்வு, வைத்தியம் என்பன சிறு குற்றவாளிகளை சமுதாய நீரோட்டத்தில் கலக்கச் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சித் திட்டங்களாகும் என்றும் அவர் கூறினார்.


SHARE

Author: verified_user

0 Comments: