பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்ஹவின் சிந்தனையில் உதித்து உருவாக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உதவியாளர்களாக 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தை கிழக்கு மாகாணத்தில் வேலையற்றிருக்கும் பட்டதாரிகள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தின் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இது தொடர்பாக திங்கட்கிழமை 21.08.2017 கருத்து வெளியிட்ட முதலமைச்சர் மேலும் கூறியதாவது@ வேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது விடயமாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் அரசாங்கம் வேலையில்லாப் பட்டதாரிகளிடமிருந்து மாவட்ட அடிப்படையில் பயிற்சிக்காகவும் நியமனத்திற்காகவும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளது.
சுய தொழில், தனியார் துறை, அரச சார்பற்ற அல்லது அரசதுறை ஆகிய எந்தத் துறைகளிலும் வேலைவாய்ப்பில்லாத பட்டதாரிகள் இந்த புதிய வேலைவாய்ப்புக்கென விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.
கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்ந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில் கிழக்கில் சுமார் 1700 பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்க பிரதமர் அனுமதியளித்ததன் அடிப்படையில் அடுத்த மாதம் 15ஆம் திகதிக்கிடையில் அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்கும் மேலதிகமாக 20 ஆயிரம் பட்டதாரிகளை அபிவிருத்தி உதவியாளர்களாக உள்ளீர்த்துக் கொள்ளப்படுவதற்கான திட்டத்தை பிரதமர் முன்னெடுத்திருத்திருப்பது இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பற்றிருக்கும் பிரச்சினைக்கு தற்போதைக்கு தீர்வைத் தரக்கூடியதாக இருக்கும்.
எனவே இந்த அரிய வாய்ப்பை கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தவற விட்டு விடாது நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
21 தொடக்கம் 35 வயதிற்கிடைப்பட்ட, வேலையற்ற பட்டதாரிகளான இலங்கைப் பிரஜைகள் எவரும், எதிர்வரும் செப்டெம்பெர் மாதம் 8ஆம் திகதிக்கு முன்னதாக இதற்கு விண்ணப்பிக்குமாறு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு கேட்டுள்ளது.”
மேலதிக விவரங்களை hவவி:ஃஃஅnpநய.பழஎ.டமஃ என்ற அமைச்சின் இணையத்தளத்தினூடாக பார்வையிட்டு செயலாளர், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, முதலாம் மாடி, மிலோதா, பழைய ரைம்ஸ் கட்டிடம், பிறிஸ்டல் வீதி, கொழும்பு 01 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.
0 Comments:
Post a Comment