(ஏ.ஹுஸைன்)
கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டிட ஆக்கிரமிப்பு மற்றும் நிருவாகக் கடமைகளுக்கு இடைஞ்சல் குறித்து பல்கலைக்கழக நிருவாகத்னால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக ஏறாவூர் பொலிஸாரினல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை செப்ரெம்பெர் 13ஆம் திகதிக்கு ஒத்திப் போடப்பட்டள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 08.08.2017 தொடக்கம் நிர்வாகக் கட்டிடத்தையும் முற்றுகையிட்டு ஆக்கிரமித்துள்ளனர்.
இதன்காரணமாக, பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைள் முற்றாகத் தடைப்பட்டதுடன், நிர்வாக நடவடிக்கை மேற்கொள்வதற்கான சூழல் இல்லையெனவும், நிர்வாக நடவடிக்கைளுக்கு இடையூறு விளைவிக்கின்றனர் எனவும் இதற்குத் தலைமை தாங்கும் 19 மாணவர்களுக்கு எதிராக ஏறாவூர்ப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்து.
இதனடிப்படையில், ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை 30.08.2017 குறித்த வழக்கை விசாரணை செய்த மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி Additional Magistrate and Additional District Judge Muhammath Ismail
Muhammath Rizvi வழக்கு விசாரணையை செப்ரெம்பெர் 13ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
0 Comments:
Post a Comment