23 Jul 2017

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை வட்டிக்குளக்கட்டு அத்தியடி ஸ்ரீ நாதம்பிரான் ஆலய அலங்கார உற்சவமும், தீர்த்தோற்சவமும்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை வட்டிக்குளக்கட்டு அத்தியடி ஸ்ரீ நாதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம் திங்கட் கிழமை (24) ஆரம்பமாகி எதிர்வரும் வியாழக்கிழமை (27) சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.

திங்கட் கிழமை (24) அலங்காரத் திருவிழா ஆரம்பமும், இரண்டாம் நாளான செவ்வாய்க் கிழமை (25) மாலை களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாற்குடப் பவனி எடுத்து வருதலும், மூன்றாறாம் நாளான புதன் கிழமை (26) 108 பானை பொங்கலும், பால்வார்க்கும் நிகழ்வும் மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று நான்காம் நாள் வியாழக்கிழமை (27) காலை 8 மணியளவில் சமுத்திர தீர்த்தோற்சவும் இடம்பெறவுள்ளது.

எதிர் வரும் வெள்ளிக்கிழமை (28) வைரவர் இடம்பெறவுள்ளதோடு, திருவிழாக் காலங்களில் சுவாமி வீதி வலம் வருதல், கூட்டுப் பிரார்த்தனைகள், மேள தாள வாத்தியக் கச்சேரிகள் என்பன இடம்பெறவுள்ளதாகவும், ஆலய கிரியை நிகழ்வுகள் யாவும், ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ வே.கு.சபாநாயக் குருக்கள் தலைமையில் இடம்பெறும் எனவும், களுதவளை உதயதாரகை மன்றத்தினதும், மேற்படி ஆலயத்தினதும் தலைவருமான வீரசிங்கம் சசிகுமார் தெரிவித்துள்ளார். 


SHARE

Author: verified_user

0 Comments: