30 Jun 2017

அமையும் மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர். ஸ்ரீபத்மநாதன்

SHARE
ஒரு முயற்சியாளரிடம் இயல்பாகவே குடிகொண்டுள்ள அல்லது வழிகாட்டப்பட்ட உள்ளக ஆளுமையின் வெளிப்பாடே ஒருவரின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலாய் அமையும் என இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர். ஸ்ரீபத்மநாதன் தெரிவித்தார்.


சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில்  வியாழக்கிழமை (29.06.2017) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிஸ்கோ இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் சுயதொழிலை எதிர்பார்த்து அதற்கான பல்வேறு பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் சுமார் 80 இற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பங்கு பற்றினர்.

அங்கு பயிற்சிச் செயலமர்வில் பிரதான வளவாளராகக் கலந்து கொண்ட ஸ்ரீபத்மநாதன் தொடர்ந்து உரையாற்றுகையில்

வறுமையான குடும்பத்தில் பிறந்து விட்டதென்பது ஒரு குற்றச் செயலல்ல. ஆனால், வளர்ந்த பின்னர் அந்த வறுமையைப் போக்க வழிகண்டு கொள்ளாமல் இருப்பதுதான் தனக்கும் தான் சார்ந்த சமூகத்திற்கும் தீங்காக அமையும்.
எனவே, முயற்சி என்பதை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.

தற்போது உலகின் முதற்தர செல்வந்தன் என்று புகழ் தேடிக் கொண்டுள்ள பில்கேற் ஒரு விறகு வெட்டியின் மகன் என்பதை மறந்து விடக் கூடாது.
இதற்கு அவரது உள்ளக ஆளுமையின்பால் ஏற்பட்ட உந்துதலே உலகின் முயற்சியாளர் வரிசையில் அவரை உயர்ந்த இடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளது.
இப்படி சுய ஆளுமை முயற்சினால் முன்னேற்றமடைந்த ஏராளமானோர் இந்த உலகில் வலம் வருகின்றார்கள்.

இந்த உதாரணங்களை நாம் கருத்தூன்றி நின்று நிதானித்துப் பார்த்து அதிலிருந்து தக்க பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
வெறுமனே, வறுமை எனது விதி என்று சோம்பேறித் தனமாக இருந்து விடக் கூடாது.

நன்கு அலசி ஆராய்ந்து பிரதேசத்தில் கிடைக்கக் கூடிய மூலவளங்களைப் பயன்படுத்தி தொழில் முயற்சிகளைத் தொடங்க வேண்டும்.

மூலப்பொருள்களை முடிவுப் பொருள்களாக மாற்றி அதற்கான சந்தை வாய்ப்பையும் சிறந்த இலாபத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
உற்பத்தியிலும், விற்பனையிலும், வாடிக்கையாளர் மற்றும் வங்கிகளுடனான தொடர்பிலும் நேர்மையைக் கடைப்பிடித்தால் தொழில் முனைவோருக்கான உயர்ந்தபட்ச தகைமையாக நேர்மை என்பது கணிக்கப்படும்.
அதனைக் கொண்டே வங்கிகளின் ஆதரவோடும் தன்னைச் சுற்றியிருக்கும் சமூகத்தின் ஆதரவோடும் ஒரு தொழில் முனைவோர் முன்னேறுவதில் எந்த விதத் தடைக்கற்களும் குறுக்கிடாது.” என்றார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலர்கள், பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு கிளை முகாமையாளர் கே. சத்தியநாதன் மற்றும் இலங்கை வங்கி பிரதிநிதிகள்  ஆகியோரும் பயிலுநர்களான இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர்.
உள்ளக ஆளுமையின் வெளிப்பாடே ஒருவரின் அதீத வளர்ச்சிக்கு உந்துதலாய் 

SHARE

Author: verified_user

0 Comments: