30 Jun 2017

அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி

SHARE
அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி தெரிவித்தார்.


வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில் 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களின் “அடைவு மட்டத்தினை அதிகரித்தல் மற்றும் செம்மைப்படுத்தல்” தொடர்பாக இடம்பெற்று வரும் கலந்துரையாடல் பற்றி வியாழக்கிழமை 29.06.2017 கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது@
பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் பொதுமக்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பிரதேசப் பொதுமக்களுக்கு தொடர்ச்சியான விழிப்புணர்வையூட்டி வருகின்றோம்.

பொதுமக்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் யாவும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும், சமூகக் கணக்காய்வுக்கு உட்பட்டதாகவும், தரம் மிக்கதாகவும், அமையப்பெற வேண்டும்.

வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதில் பிரதேசப் பொது மக்களும் அதிகாரிகளாகிய நாங்களும் உறுதியாக இருக்கின்றோம்.

இதுவரை அநேக அபிவிருத்தி திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் காணப்பட்ட சில குறைபாடுகள் மக்களின் ஒத்துழைப்புடன் அவதானிக்கப்பட்டு அவற்றை நிவர்த்திப்பதற்கான  நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
தற்பொழுது மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் சமூகக் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக அமைகின்றது.
இதனால் அனைத்து சமூக மட்ட அமைப்புக்களும் அபிவிருத்தித் திட்டங்களின் அடைவு மற்றும் செம்மைப்படுத்தல் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.

மேலும் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் போது பின்னடைவுகள் ஏற்படுத்தப்படல், கையாடல்கள் மேற்கொள்ளல், அன்பளிப்புக்கள் வழங்கல் போன்றவை இடம்பெறுமாக இருந்தால் உடனடியாக மக்கள் விழிப்படைந்து கொள்ள வேண்டும்.

அதுபற்றி வாகரைப் பிரதேச செயலாளர் (0776653867), உதவிப் பிரதேச செயலாளர் (0774448115) மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் (0776180414) ஆகியோரது கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

நேரடியாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ ஆதாரத்துடன் விடயங்களை முன்வைக்வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.”என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: