6 Mar 2017

மருதமுனையில் கல்வி அபிவிருத்திச் சபை ஸ்தபிக்கப்பட்டுள்ளது

SHARE
(ALM.Sinas)

கல்முனை கல்வி வலையத்தின் கீழ் உள்ள பிரதேசங்களில் கல்வி நிலையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கல்வி அபிவிருத்திச் சபைகளை உருவாக்கும் பணி
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டமானது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் கல்முனை கல்வி அபிவிருத்திக் குழு தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸின் வழிகாட்டலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மருதமுனையின் கல்வி அபிவிருத்திச் சபையை ஸ்தாபிப்பதற்கான ஒன்றுகூடல் (04.03.2017) அன்று பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் வித்தியாலைய மண்டபத்தில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல், கோட்டக்கல்வி அதிகாரி ஏ.எல்.சக்காப் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது.
இதில் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகள், பல்கலைக்கழக பதிவாளர்கள், விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், அரசியல் தலைவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், துறைசார்ந்தவர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என சுமார் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மருதமுனையின் கல்வி அபிவிருத்தி தொடர்பான சமகால நிலை தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். இறுதியில் மருதமுனையின் கல்வி அபிவிருத்திச் சபை ஸ்தாபிக்கப்பட்டது.

இதன் போது பின்வருவோர்  நிருவாக சபைக்கு  தெரிவு செய்யப்பட்டனர். தலைவர்- தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.பி.எம்.இஸ்மயில், செயலாளர்- உதவி விவசாயப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.ஹரீஸ், பொருளாளர் - இறைவரி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எம்.ஐ.எம்.உவைஸ்,  உதவித் தலைவர் கே.எம்.சுக்ரி, உதவிச் செயலாளர் ஏ.எம்.ஹம்ஸா முகையதீன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். பாடசாலை அதிபர்களையும் இதில் இணைத்துக் கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டன.










SHARE

Author: verified_user

0 Comments: