)க.விஜி)
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதலாவது மாணவர் பாராளுமன்ற தேர்தல் (2017) இன்று(2.3.2017)வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணிவரையுள்ள காலப்பகுதியில் பிரதான மண்டபத்தில் மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபரும், பாடசாலையின் தேர்தல் ஆணையாளருமான
ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாணவர் பாராளுமன்ற தேர்தலில் 87 மாணவர்கள் போட்டி போட்டு துண்டுப்பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கி தேர்தல் பிரசாரங்களை முன்னேடுத்தனர்.இதன்போது தரம்(6-13) ஆறு முதல் பதிமூன்று வரையும் உள்ள மாணவர்களே வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.
இத்தேர்தலில் கனிஸ்ட வாக்கெடுப்பு அலுவலகராக திருமதி இராஜசுலோசனா நடராசாவும்,சிரேஸ்ட வாக்கெடுப்பு அலுவலராக கே.ரவீந்திரனும் தேர்தல் சட்டத்திட்டத்திற்கு ஏற்ப மாணவர் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.உதவி தேர்தல் ஆணையாளர்களாக திரு ஜீ.சதானந்தராஜாவும்,திருமதி மணிமேகலா விஜயகுமார் ஆகியோர்களும் கடமையாற்றினார்கள்.இதன் சபாநாயகர், உதவி சபாநாயகர், செயலாளர், பத்து அமைச்சர்கள், ஆகியோர்கள் உட்பட 65 மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக ஆசிரியரும்,உதவிதேர்தல் ஆணையாளருமான ஜீ.சதானந்தராசா தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment