4 Mar 2017

மட்.மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி

SHARE
மட்.மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி வெள்ளிக்கிழமை (03) மாங்காடு
பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் திருமதி.தவமணிதேவி குணசேகரம் தலைமையில் நடைபெற்ற இத்திறனாய்வுப் போட்டியில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், ஞா.கிருஷ்ணபிள்ளை, மா.நடராசா, பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம், பதில் நீதவானும் சிரேஸ்ட்ட சட்டத்தரணியுமான த.சிவநாதன் உள்ளிட்ட பிரமுகர்கள், மற்றுமு; கிராம மட்ட பொது அமைப்புக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் க.தன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மாணவர்களிண் அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி என்பன இடம்பெற்றதோடு, குறிஞ்சி, முல்லை, மருதம் என மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டு ஏனைய விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. 

இதில் 379 புள்ளிகளைப் பெற்று முல்லை இல்லம் முதலாம் இடத்தையும், 367 புள்ளிகளைப் பெற்று மருதம் இல்லம் இரண்டாம் இடத்தையும், 349 புள்ளிகளைப் பெற்று குறிஞ்சி இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன. இதன்போது வெற்றியீட்டிய வீர வீரர்கணைகளுக்கு, சான்றிதழ்களும், வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
























SHARE

Author: verified_user

0 Comments: