1 Mar 2017

நாடு முழுவதிலும் இடம்பெறும் நகர அபிவிருத்தியில் நாமும் இணைந்து கொள்ள வேண்டும். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைமைப் பொறியியலாளர் ரீ. பத்மராஜா

SHARE
தற்பொழுது நாடு முழுவதிலும் நகர அபிவிருத்தி இடம்பெறுகின்றது. அதிலே முக்கியமாக வீதிப் பயணப் பாதுகாப்பு கவனத்திற் கொள்ளப்படுவதால் நகர நெடுஞ்சாலைகளோடு ஒட்டிய நகரங்கள் அகலமாக்கப்படுகின்றன என்று மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின்
தலைமைப் பொறியியலாளர் ரீ. பத்மராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் நகரத்தை ஊடறுத்துச் செல்லும் நகர விரிவாக்கல் அபிவிருத்தித் திட்டம் பற்றி அவர் விவரம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக புதன்கிழமை (01.03.2017) மேலும் தெரிவித்த அவர், சமகாலத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களினால் உயிரிழப்புக்கள், அங்கவீனங்கள், பொருளாதார நஷ்டங்கள் என்பன ஏற்படுகின்றன.
எனவே இந்த இழப்புக்களையும் அழிவுகளையும் முடிந்தளவு குறைத்துக் கொள்வதற்காக நாட்டு மக்களின் நன்மை கருதியே நெடுங்சாலைகள், பெருந்தெருக்கள். வீதிகள் என்பன அபிவிருத்தி செய்யப்படுகின்றன.
சன அடர்த்தியான, வீதிப் போக்குவரத்திற்கு சௌகரியமில்லாத, பாதுகாப்பற்ற வீதிகளை அகலமாக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

மனித உயிர்களை உறுஞ்சிக்குடிக்கும் இடங்களாக குறுகலான நகரங்கள் இருந்து வருகின்றன.

இதனை அனைவரும் அக்கறையுடன் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
குறுகலான நகரத் தெருக்களை சனத்தொகை அடர்த்தி கூடக் கூட எப்போதும் அகற்றி அகலமாக்க வேண்டிவரும் என்பதை நாம் கவனத்தில் கொண்டு கட்டிட நிர்மாணங்களை மேற்கொள்ள வேண்டும்.
தற்போதிருக்கும் திட்டமிடாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ள நகரங்களையும் நெடுஞ்சாலைகளையும் அடுத்த சந்ததிக்கு பாதுகாப்பற்ற உயிரச்சுறுத்தலுடன் பயணிக்கக் கூடிய நகரங்களாக நாம் விட்டுச் செல்லக் கூடாது.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நெடுஞ்சாலைகளை அகலமாக்கி நகரங்களை பாதுகாப்பானதாக நிர்மாணிக்கும் வாய்ப்புக்களை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதற்கு வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், குடியிருப்பாளர்கள், மற்றும் காணிச் சொந்தக் காரர்கள் அதிகாரிகள் பொதுமக்கள் என எல்லோரும் ஏகோபித்த ஆதரவை வழங்க வேண்டும்.

SHARE

Author: verified_user

0 Comments: