சுற்றுலாத்துறை அமைச்சின் 42.953 மில்லியன் செலவில் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட கல்லடி கடற்கரை கடலியற் பூங்கா சுற்றுலா அபிவிருத்தித்திட்டங்களை சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான அமைச்சர் ஜோன் அமரதுங்க
வெள்ளிக்கிழமை(03) காலை 10.30 மணிக்கு திறந்து வைக்கிறார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகண முதலமைச்சர் நசீர் அஹமட், புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், அலிசாஹிர் மௌலானா, எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான இ.பிரசன்னா, ஜீ.கிருஸ்ணப்பிள்ளை, ஆர்.துரைரெட்ணம், எம்.எஸ்.சுபைர், சிப்லி பாருக், என். திரவியம், எம்.நடராசா, ஜீ.கருணாகரம், எஸ்.சந்திரகாந்தன், ஆகியோரும், சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாசவும் கலந்து கொள்கிறார்.
கல்லடி கடற்கரை கடலியற் பூங்கா சுற்றுலா அபிவிருத்தித்திட்டத்தில் 2 உணவகங்கள், 10 விற்பனை நிலையங்கள், 100 இருக்கைகள், சுற்றுலாள்பிபரயாணிகள் ஓய்வெடுக்கும் 10 கபானாக்கள், சிறுவர் விளையாட்டுத்திடல், கடற்கரைக்கரப்பந்தாட்ட மைதானம், சூரிய மின்கலத்துடனான ஒரு கிலோமீட்டர் ஒளியூட்டல் மற்றும் மரநடுகையும் டேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், கல்லடிப்பாலம் அருகே 5.375 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள மீனிசை சிறுவர் பூங்கா இரண்டாம் கட்டமும் அமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ளது.
0 Comments:
Post a Comment