தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையானது(NAITA) தொழில்சார் பயிலுனர் பயிற்சியையும், தொழில்துறை வல்லுனர்கள் NVQசான்றிதழ் பெறுவதையும் மேம்படுத்தும் நோக்கில் 'வீதியோர பிரச்சார நிகழ்ச்சித் திட்டம்.'ஒன்றினை மாவட்ட மட்டத்தில் ம.தெ.எ.பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பட்டிருப்புச் சந்திக்கு அருகாமையில் 23.02.2017 (வியாழக்கிழமை) இன்று NAITA வின்
மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ஜனாப் S.A.M சலீம் மௌலானா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் NAITA வின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பணிபுரியும் பயிலுனர் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்கள் மேலும் ம.தெ.எ.பற்று பிரதேச செயலகத்தின் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் முதலானோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வானது பட்டிருப்புச் சந்தியை மையப்படுத்தி களுவாஞ்சிகுடி மற்றும் வெல்லாவெளிப் பிரதேச செயலகங்களின் அனைத்துப்பிரதேசங்களிலும் நடைபாதையினூடாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
0 Comments:
Post a Comment