24 Feb 2017

மட்டக்களப்பு நகரில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை முன்நெடுப்பு.

SHARE
(க.விஜி)
மட்டக்களப்பு நகரில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமணையின் பூச்சியியல், டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினரால் நகரிலுள்ள பல இடங்கள் துரிதசோதனை நடவடிக்கைககள் இடம்பெற்று வருகின்றது. பூச்சியல் டெங்குக் கட்டுப்பாட்டு உத்தியோகஸ்தர் திருமதி. சிந்துஜா ஞானநாதன் தலைமையிலான குழுவினர்கள் பிரதேசத்தில் உள்ள
பாடசாலைகள், அரச திணைக்களங்கள், பொதுமக்களின் வீடுகள், பொதுக்கட்டிடங்கள் போன்றவற்றை நாளாந்தம் பரிசோதனை செய்துவருகின்றார்கள்.

அந்த வகையில் மேற்படி இடங்களில் உள்ள டெங்குபரவக்கூடிய இடங்கள் மலசல கூடங்கள், வடிகான்கள், நீர்த்தாங்கிகள் என்பன பரிசோதனை செய்து வருகின்றனர். இன்னும் சில இடங்களில் டெங்குபரவக்கூடிய சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 2 வாரத்தில் சுமார் 390 இடங்கள் இதுவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 

மட்டக்களப்பு நகரில் டெங்கு பரவுவதைகட்டுப்படுத்தும் நோக்கில் பரவலான வேலைத் திட்டங்கள் பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் வவுணதீவு, களுவாஞ்சிகுடி, ஏறாவூர், செங்கலடி, மற்றும் மட்டக்களப்பு நகர் போன்ற பகுதியகளில் பரிசோதனைகள் முன்நெடுக்கப்பட்டுள்ளன.

எனவே,பொதுமக்கள், அரசஊழியர்கள், திணைக்கள அதிகாரிகள் தங்களின் இடங்களை டெங்கு உருவாகாமல் இருப்பதற்குரிய சூழலைவைத்திருக்குமாறு மட்டக்களப்பு, பிராந்திய சுகாதார பணிமனைய கேட்டுக்கொண்டுள்ளது.







SHARE

Author: verified_user

0 Comments: