மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிலுள்ள ஏறாவூர் மீராகேணி ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் (Pசiஅயசல ஆநனiஉயட ஊயசந ருnவை) நீண்ட காலமாக வைத்தியர்கள் கடமைக்கு வராததால் கிராம மக்கள் வியாழக்கிழமை (23.02.2017) கவன ஈர்ப்பு
ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
ஏற்கெனவே, இவ்வைத்தியசாலைக்கு தினமும் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சைகள் வழங்குவதற்காக நிரந்தரமாக தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள பெண் வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவர் நீண்டகாலமாக இங்கு தங்கியிருந்து சேவையாற்றிய பின் இடமாற்றலாகிச் சென்று விட்டார்.
அதன் பின்னர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் சுழற்சி முறையில் வந்து சென்றனர்.
இப்பொழுது அவ்வாறான சுழற்சி முறை வைத்திய சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதால் மீராகேணி, ஐயன்கேணி, தாமரைக்கேணி, சத்தாம்ஹ{ஸைன், மிச்நகர், முஹாஜிரீன் கிராமம், சவுக்கடி, சின்னச்சவுக்கடி, தளவாய் போன்ற கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான தமிழ் முஸ்லிம் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைக் கருத்தற் கொண்டே நிரந்தர வைத்தியரை நியமிக்குமாறு கோரி கவன ஈர்ப்பு முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே இந்தக் கிராம மக்களின் சுகாதாரத் தேவைகளைக் கருத்திற் கொண்டு உடனடியாக வைத்தியரை நியமிக்கக் கோரி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு ஊர் மக்கள் சார்பாக ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அவசர வேண்டுகோள் ஒன்றை எழுத்து மூலம் விடுத்துள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் தெரிவித்தார்.
இது விடயமாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் மற்றும்; பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள அவசர வேண்டுகோள் கடிதத்தில்@ ஏறாவூர் மீராகேணி ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம்; (Pசiஅயசல ஆநனiஉயட ஊயசந ருnவை) வைத்தியரில்லாத நிலையமாக நீண்ட நாட்களாக முடங்கிக்கிடக்கின்றது.
வைத்தியர்கள் வருகை தராத காரணத்தினால் நாளாந்தம் சிகிகச்சைக்காக சமூகமளிக்கும் நூறு;றுக்கணக்கான நோயாளிகள் விசனத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
தற்போது இவ்வைத்திய நிலையம் அமைந்துள்ள பிரதேசம் டெங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பிரதேசமாகும் என சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் பிரகடனப்படு;த்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத் தக்கதாகும்.
எனவே மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு சிறந்த சுகாதார சேவையை வழங்கும் பொருட்டு உடனடியாக இவ் வைத்திய நிலையத்துக்கு நிரந்தர வைத்தியரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு தயவாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments:
Post a Comment