தமிழர்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டும் என அண்மையில் மலைநாட்டுப் பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட எமது ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அவருடைய கருத்தானது முழுத்தமிழர்களுக்குமுள்ள செய்தியாக நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் புதிதாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசியலமைப்பு என்பது பெரும்பான்மை மக்களுக்கு பெரிதாக ஒன்றையும் கொடுக்கப் போவதில்லை. என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசிசங்கம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால், அரச ஆடு மரபுரிமை வள மேம்பாட்டு நிலையம் தும்பங்கேணியில் செவ்வாய்க் கிழமை (14) திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு தலைமையுரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் இதில் மேலும் தெரிவிக்கையில்…
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றுவதென்பது பெரும்பான்மை மக்களுக்கு ஒன்றும் பெரிதான விடையமல்ல, ஆனால் சிறுபான்மை மக்கள் இதுவரைக் கோரிநிற்கும் விடையங்கள் புதிய அரசியலமைப்பில் எழுதப்பட வேண்டுமாக இருந்தால் ஜனாதிபதி அவர்கள் தெரிவிப்பது போன்று தமிழர்கள் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும். அதுபோல் இலங்கை முழுவதும் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் அனைவரும் அவரவர் தலைமையின் கீழ் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும்.
தலைமைகள் என்பது வெறும் மனிதர்களல்ல அனுபவம், ஆளுமை, உலக அரங்கிலே பெற்ற அந்தஸ்த்து, நம்முடைய நாட்டுத் தலைவர்களால் மதிக்கப்படுகின்ற தத்துவம், இவை அனைத்தையும் கொண்டவைகள்தான் தலைமைகள். அந்த வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் அத்தகைய தத்துவங்களைக் கொண்டிருக்கின்றன.
இடையிடையே ஒருசில தலைமைகள் முளைக்க நினைக்கின்றன அதுவும் ஒரு வகையில் இயற்கைதான். மழை விழுகின்றபோது காளான்கள் முளைக்கும் ஆனால் காளான்களை மரங்களாக நாங்கள் நம்பிவிடக்கூடாது. இந்நிலையில் மிகவும் நுணுக்கமாகச் சிந்தித்து எம்மை அழைத்துச் செல்கின்ற தலைமைத்துவத்தின் கீழ் நாம் அனைவரும் அணிதிரழ வேண்டும். இந்நலையில் அரசியலமைப்பை இணக்கப்பாட்டுடன் ஆக்கினால்தான் அது அர்த்தபுஸ்ட்டியுள்ள நிலைத்து நீடித்து நிற்கும் அரசியலமைக்காக அமையும். என அல் மேலும் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment