விமல்ராஜின் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் இயங்குகின்றன. பொலிசார் மிக வேகமாக காலத்தை இழுத்தடிக்காமல் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். களத்துக்குச் சென்று கடடையதற்றுவதற்கும், வீட்டிலே இப்பதற்கும், பயமாக இருக்கின்றது என பல அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றர். தற்போது அரச ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் இயல்பு நிலைகுலைந்து பயங்கர சூழலில்
வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த பயத்தை போக்க வேண்டுமாக இருந்தால் பெலிசார் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும்.
என தமிழ் தேசியக் கூட்டமை;பபின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் குறிப்பிட்டார்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளரான நேசகுமாரன் விமல்ராஜ் என்பவர் மீது புதன்கிழமை (22.02.2017) இரவு மட்டக்களப்பு களுதாவளை 4 ஆம் பிரிவில் சோமசுந்தரம் வீதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து வெள்ளிக்கிழமை (24) காலை களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் சிலை முன்பாக பட்டிருப்புத் தொகுதி தமிழ் சமூகம், எனும் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதில் அவர் மேலும் தெரிவிக்கையில்…
கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடித்தும், சுட்டும், கொலை செய்யப்பட்டுள்ளார்கள், இந்த நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்ட பின்னர் 2015.02.08. அன்று மட்டக்களப்பு கச்சேரியில் கடமை புரியும் உள்ளக கணக்காய்வாளர் தேவகாந்தன் என்பவர் மீது தாகுதல் நடாத்த இனம்தெரியாத நபர்கள் அவரது வீட்டுக்குச் சென்றபோது தெய்வாதீனமாக தேவகாந்தன் அங்கு இருக்கவில்லை அதற்குப்பதிலாக அங்கு சென்ற குழுவினர் அவருடைய மனைவியையும், அவருடைய மைத்துனரையும் படுமோசமான முறையில் அடித்துத்தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொர்பிலான குற்றவாளிகள் இதுவரையில் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
இதன் பின்பு 3 மாதங்களுக்குப் பிறகு சமூகசேவை உத்தியோகஸ்த்தரான மதிதயன் என்பவர் மீது 2015.05.26 அன்று இனம்தெரியாத நபர்கள் அவரது வீட்டுக்குச் சென்று அவ்விடத்திலே சுட்டுக் கொல்லப்பட்டார். மதிதயன் கொல்லப்பட்டு 2 வருடங்கள் கழிந்த நிலையில் அச்சம்பவத்தின் சூத்திரதாரிகள் யாரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
அடுத்து கிரான் பிரதேச செயலகத்தில் தனது கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிராம சேவை உத்தியோகஸ்த்தர் ஒருவர் துன்புறுத்தப்பட்டார்.
அதன் பின்னர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் கடமை புரிந்த எஸ்.விக்னேஸ்வரன் எனும் கிராம சேவை உதியோகஸ்த்தர் அடித்துக் கொலை செய்யப்படப்பட்டார்.
இவ்வாறாக குற்றச் செயல்களுக்குரிய குற்றவாளிகள் யாரும் இதுவiரியல் கைது செய்யப்படாத நிலையில் கடந்த 2017.02.22 அன்று காணி அதிகாரியான விமல்ராஜின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமல்ராஜின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் கொலை முயற்சியாகும், ஆனால் தெய்வாதீனமாக விமல்ராஜ் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். மதிதயனுடைய விடையத்தில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை பொலிசார் கண்டு பிடித்திருந்தால் அதன் பின்னர் தொடர்ந்து வந்த இக்குற்றச் செயல்கள் இடம்பெற்றிருக வாய்ப்பில்லை. தொடர்ந்து அரச ஊழியர்கள் மீது மேற்கொள்ளப் பட்டுவரும் கொலை முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும். இவ்விடையம் தொடர்பில் பொலிசார் துரிதமாக செயற்பட வேண்டும்.
மட்டக்களப்பில் அரச அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் வியாழக்கிழமை (23) நாடாளுமன்றிலே நானும் என்சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சம்மந்தப்பட்ட அமைச்சருடனும். எதிர்க் கட்சித் தலைவருடனும் பேசியுள்ளோம். பொலிஸ்மா அதிபருடன் பேசி இவற்றுக்கு நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் எம்மிடம் உறுத்தியளித்துள்ளார்கள்.
விமல்ராஜின் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்மகவம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் இயங்குகின்றன. பொலிசார் மிக வேகமாக காலத்தை இழுத்தடிக்காமல் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். களத்துக்குச் சென்று கடமையாற்றுவதற்கும், வீட்டிலே இப்பதற்கும், பயமாக இருக்கின்றது என பல அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றர். அரச ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் இயல்பு நிலைகுலைந்து பயங்கர சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த பயத்தை போக்கவேண்டுமாக இருந்தால் பெலிசார் குற்றளிகளை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும்.
எனவே இவ்வாறான சம்பவங்களில் தொடர்புபட்ட குற்றவாளிகளை பொலிசார் கண்டுபிடிக்க தாமதிக்கக் கூடாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment