தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அம்பாறை மாவட்ட உஹன பிரதேசத்தில் கொணாகொல்ல மற்றும் பறகஹாகலே
நிலைய பொறுப்பதிகாரி காரியாலயங்கள் ஞாயிற்றுக்கிழமை (19.02.2017) திறந்து வைக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலமுகா கட்சியின் தலைவருமான றஊப் ஹக்கீம் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அம்பாறை மாவட்டத்தில் 3ஆம் கட்ட நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகல மாவட்டங்களில் சில பகுதிகள் உட்பட 40,000 நீர் இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளன.
இதன்மூலம் 200,000 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.
இந்நிகழ்வில் பிரதியமைச்சர் பைஸால் காசீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், சிறியானி விஜயவிக்ரம, கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மஞ்சுள பெர்ணாந்து, ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அப்துல் மஜீத், உட்பட பிரதேச முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment