பெண்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வதற்கான பிரச்சாரப் பாத யாத்திரை புதன்கிழமை 01.03.2017 காலை 9 மணிக்கு மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் ஆரம்பமாகி மட்டக்களப்பு டேபா மண்டபவம் வரையில் செல்லவுள்ளதாக மாவட்ட மகளிர் பிரிவு
அபிவிருத்தி உத்தியோகத்தர் சந்திரசேகரம் அருணாளினி தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இடம்பெறும் இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இயங்கி வரும் பிரதேச பெண்கள் செயலணியும் மாவட்ட மகளிர் பிரிவு உறுப்பினர்களளும் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுளிலும் சுமார் 1000 அங்கத்தவர்கள் பெண்கள் செயலணியோடு இணைந்து செயலாற்றுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
அபிவிருத்தித் திட்டங்களினூடாக பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பிரதிபலிப்பதாக இந்தப் பாதை யாத்திரை நிகழ்வு அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கான விழிப்புணர்வுகள் பல வழிகளிலும் வழங்கப்பட்டிருந்தாலும் பெண்கள் இன்னமும் பல விடயங்களில் முன்னேற வேண்டியிருக்கின்றது.
பெண்களின் முன்னேற்றம் என்பது ஒன்றிணைந்த ஒரு விடயமாகப் பார்க்கப்பட வேண்டும். கடன் பிரச்சினை வீட்டு வன்முறைஇ பாலியல் துஷ்பிரயோகம்இ சிறுவர் வன்முறைகள் இன்னமும் குறைந்த பாடில்லை.
பல மட்டங்களில் விழிப்புணர்வுகள் இருந்தாலும் சுய ஆளுமை விருத்தி போதாமலிருப்பதும் சமூக விழுமியங்கள் இன்னமும் பெண்களை பின்னிலைப் படுத்தி வைத்திருப்பதும் பெண்களின் முன்னேற்றத்தில் ஒரு தடைக்கல்லாக இருப்பதாகத் தெரிவித்த மிருணாளினி இதற்கு ஒட்டு மொத்த சமூகத்தின் கூட்டிணைந்த ஒரு பொறிமுறை விழிப்புணர்வே வெற்றியளிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment