11 Feb 2017

கண்ணன் வித்தியாலத்தில் காட்டு யானைத்தாக்குதல்

SHARE
பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்ப்பட்ட மட்/பட்/கண்ணன் வித்தியாலத்தியாலயத்தின் அதிபர் அலுவலகம்,பாடசாலையின் களஞ்சியசாலை என்பன  காட்டுயானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளாகி சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி. நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்


போரதீவுப்பற்றுப் கோட்டத்தில் உள்ள  35ம் கொலணி கண்ணன் வித்தியாலத்தில் (9.2.2017 வியாழக்கிழமை ) 9.34 மணியளவில்  புகுந்த  காட்டுயானைகள் ஐந்து; பாடசாலையின் களஞ்சியசாலையையும்,அதிபர் அலுவலகத்தையும் போட்டிபோட்டு  சரமரியாக உடைத்து சேதப்படுத்தியுள்ளது.இதனால் பாடசாலையின் களஞ்சியசாலை, அதிபர் அலுவலகம் உருக்குழுத்து வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களின் கற்றல் உபகரணங்கள்,புத்தங்கள்,பாடசாலையின் உடைமைகள்,பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்,இரவிலும் பகலிலும் பொதுமக்கள் அச்சத்தில் மத்தியில் இக்கிராமத்தில் வாழும்நிலை உள்ளதாக   கண்ணபுரம் கிழக்கு கிராமஅபிவிருத்திச்சங்கத்தலைவர்  தெரிவித்தார்இந்த பாடசாலையில் யானையினால் ஏற்படுத்தப்பட்ட  தாக்குதலைப்பற்றியும், சேதத்தைப்பற்றியும் வெல்லாவெளிப் பொலிஸ்நிலையத்திற்கும் , அதிபர் திரு.பா.சுந்தரராஜன் அவர்கள் எனக்கும், தெரியப்படுத்தியுள்ளார் என வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் போரதீவுப்பற்றுக் கோட்டக் கல்வி அலுவலகம் யானையின் அட்டகாசத்தால் தாக்கமுற்றமை பற்றியும், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளருக்கும், வெல்லாவெளிப் பொலிசாருக்கும், மாவட்டச் செயலாளருக்கும், யானையின் பாதிப்புக்கள் பற்றி போரதீவுப்பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



இது மாத்திரமன்றி அறுவடை நேரத்தில் நெல் வயலினையும்,வாழைமரங்கள்,தென்னைமரங்கள் போன்ற பயிர்களையும் சேதப்படுத்தியும் உள்ளது.,விவேகானந்தபுரத்தில் உள்ள போரதீவுப்பற்று பிரதேச சபையின் திண்மக்கழிவகற்றல் களஞ்சியசாலையின் வேலியையும் சேதப்படுத்தியுள்ளது. போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் யானையின் தாக்குதலினால் பொதுமக்களின் உடைமைகள்,வீடுகள்  தொடர்ச்சியாக யானையின் அட்டகாசமான செயற்பாட்டினால்  சேதப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் விவசாயிகளின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.இரவுநேரத்தில் தாங்கள் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மைகளை கண்விழித்து பாதுகாத்து வருகின்றோம்.உயிரை கையில் எடுத்துக்கொண்டு அச்சத்தில் மத்தியில் உயிர்வாழ வேண்டியுள்ளதாக பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள்,விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றார்கள்.













SHARE

Author: verified_user

0 Comments: