மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பல கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்காக ஆரம்பக்கட்ட கூட்டம் செவ்வாய்க் கிழமை (14) தும்பங்கேணி இளைஞர்
விவசாயத்திட்டம் எனும் கிராமத்தில் இடம்பெற்றது.
உலக வங்கி அபிவிருத்தித் திடத்தின் கீழ் இலங்கையில் அனுராதபுரம், யாழ்ப்பாணம், பதுளை, அம்பாறை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் மட்டக்களப்பு, ஆகிய மாவட்டங்களின் அபிவிருத்திகளுக்காக உலக வங்கியும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து 150 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கீடு செய்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்ட முகாமையாளர் சந்தண ஹேவவாசம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யயப்பட்ட கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்காக ஆரம்பக்கூட்டமே இதன்போது இடம்பெற்றது.
இதில் பொதுமக்கள் மத்தியில் காணப்படும் பிரச்சனைகள், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், வாழ்வாதார ரீதியாக மேற்கொண்டுவரும் பிரச்சனைகள் தொடர்பில் இதன்போது அதிகாரிகள் கேட்டறிந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் கீழ் நவீன விவசாயபயிர்செய்கை, விவசாயம் தொடர்பான தொழிநுட்ப பயிற்சிகள், போன்ற பல விடையங்கள் இத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதன்போது கிழக்குமாகாண விவசாய திணைக்கள அதிகாரிகள், உலக வங்கியின் அதிகாரிகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள், மற்றும், கிராம மக்கள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment