அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பிலான விளக்கம் கூறும் விசேட கலந்துரையாடல் நிகழ்வு சனிக்கிழமை (11) மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழசஸ்ரீரசுக் கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது லங்கா சமசமாசக் கட்சியின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல் அமைப்பு உருவாக்கக் குழுவில் அங்கம் வகிப்பவருமான சிரேஸ்ட சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரெட்ண அவர்கள் கலந்து கொண்டார். புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் பற்றியும் இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் அமைப்புகளின் நிலைப்பாடுகள் பற்றியும் அனைவருக்கும் தெளிவு படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்.
தற்போது இலங்கை ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் முன்முரமாக இருக்கின்றது. இதன் போது இந்தியாவின் நிலைமையில் நோக்குவோமானால் அங்கு முழு நாடும் ஒருமித்துச் செயற்பட்டு அரசியல் அமைப்பை உருவாக்கி அதனை எல்லோருடைய அரசியல் அமைப்பு என்று சொந்தம் கொண்டாடுகின்றார்கள்.
இலங்கையைப் பொருத்தவரையில் நிலைமை அவ்வாறு இல்லை. நாங்கள் சுதந்திரம் அடைந்த போது பிரித்தானியரால் ஆக்கப்பட்ட சோல்பரி அரசியல் அமைப்பின் கீழ் தான் சுதந்திரம் அடைந்தோம். இதனை எமது நாட்டில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு என்று சொந்தம் கொண்டாட முடியாது. 1970ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முன்னனியாகக் கொண்ட முக்கூட்டு முன்னனி அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக மக்களின் ஆணையைப் பெற்றிருந்தது. அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக அரசியல் நிர்ணய சபையை உருவாக்கினார்கள். இது எமது பாராளுமன்றத்திற்கு வெளியில் உருவாக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்டதற்கான காரணம் ஏற்கனவே இருந்த சோல்பரி அரசியல் அமைப்பு முறையில் இருந்து முற்றாகத் துண்டித்து சுNதுச அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கே ஆகும்.
இங்கு கவனிக்க வேண்டிய விடயம் பாராளுமன்றமாக இருந்தால் அங்கு மூன்றில் இரண்டு பெரும்பாணமை தேவை ஆனால் இவ்விடயத்தில் பெரும்பாண்மை பார்க்கப்பட்டNது தவிர மூன்றில் இரண்டு பெரும்பாண்மை கருத்தில் கொள்ளப்படவில்லை. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பொருத்தவரையில் தமிழ் காங்கிரஸ்ஸில் மூன்று உறுப்பினர்களும் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் பதினான்கு உறுப்பினர்களும் இருந்தார்கள்.
இதில் இலங்கைத் தமிழரசுக்கட்சித் தலைவர்கள் தாங்கள் அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவாகவும் தமிழ் மக்களுடைய அபிலாi~களைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் கோரினார்கள். ஆனால் மூன்று நாட்களிலேயே அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் காரணமாக அவர்கள் வெளியேற நேர்ந்தது. தொடர்ந்து அரசியல் அமைப்பு ஆக்கும் பணிகள் நடைபெற்றன. நான் லங்கா சமசமாசக் கட்சியைச் சேர்ந்தவன் என்னுடைய தலைவர் கெல்வின் ஆர் டி சில்வா அந்த அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் பங்கேற்றிருந்தார்.
அந்த அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் நாம் கவனிக்க வேண்டிய விடயம் அதனை ஆக்குவது அந்த வேலையைப் பொறுப்பிக்கப்பட்ட அமைச்சர் அல்ல எனவே அவ் அரசியல் அமைப்பில் இடம் பெற்ற ஒற்றையாட்சி மற்றும் பௌத்தத்திற்கான சிறப்புரிமை என்பன கெல்வின் ஆர் டி சில்வாவினுடையதோ அல்லது லங்கா சமசமாசக் கட்சியினுடையதோ நிலைப்பாடு அல்ல. அந்த அரசியல் அமைப்பை முழு நாட்டு மக்களும் பங்கு கொண்ட அரசியல் அமைப்பாகக் கருதப்படக் கூடியதல்ல.
பின்னர் 1977ல் தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை வெளிப்படுத்தினார்கள். எனவே 1978ம் ஆண்டு ஆக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்திலும் தமிழர்களின் பங்களிப்பு இருக்கவில்லை. அப்போது பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பாண்மையைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி தனது அரசியல் அமைப்பாக அதனை ஆக்கியது.
தற்போது ஒரு பொன்னான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன ஒன்றிணைந்து செயற்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் அமைப்பு ஆக்கத்தில் பங்காளியாகச் செயற்பட்டு வருகின்றது. அந்த வகையில் 170க்கும் மேற்பட்ட அங்கத்தவர்களின் ஆதரவினை இவர்கள் பெற்றிருக்கின்றார்கள். கூட்டு எதிரணி இதற்கு ஆதரவளிக்க மாட்டாது. வாசுதேவ நாணயக்கார அவர்கள் நவ சமசமாசக் கட்சியின் தலைவராக இருக்கின்ற போதிலும் ஆக்கப்படும் அரசியல் அமைப்புக்கு ஆதரவளிக்க மாட்டேன் என்று கூறி வருகின்றார்.
இன்றைய அரசியல் அமைப்பில் முக்கியத்துவம் வழங்கப்படுகின்ற மூன்று விடயங்களில் அதிகாரப் பரவலாக்கம் மற்றும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்ற இரண்டு பற்றி இங்கு குறிப்பிட வேண்டும்.
அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் முன்னைய வரலாறுகளைப் பார்க்கும் போது ஆரம்பத்தில் அதிகாரப் பரவலாக்கம் பற்றி உரத்து ஒலித்தவர் எஸ்.டபிள்யு. ஆர். டி பண்டாரநாயக்க. 1977ல் தமிழர்கள் தமது தனி நாடு கோரிக்கையால் அதிகாரப் பரவலாக்கம் பற்றி வலியுறுத்தவில்லை. இன்னும் சற்று மன்நோக்கிப் பார்த்தால் 1949ல் பாராளுமன்றத்தில் இருந்த மலையகப் பிரதிநிதிகள் ஏழு பேரின் அங்கத்துவத்தை இலலாமல் செய்யும் நடைமுறையாக இலங்கைக் குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் பத்து லெட்சம் மலையக மக்க் வாக்குரிமை இழந்தார்கள். ஜி.ஜி பொன்னம்பலம் அவர்களின் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் பிளவு பட்டது. எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் அணி எதிர்க்க ஜி.ஜி பொன்னம்பலத்தின் அணியினர் சார்பாக வாக்களித்தார்கள். அப்போதுதான் எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்கள் அதிகாரத்தை கொழுமு;பில் குவித்து வைத்திருப்பதால் சிறுபான்மை இன மக்கள் நண்மை அடையப் போவதில்லை என்று தெரிவித்தார். அதிகாரப் பகிர்வு சம~;டி அடிப்படையில் வழங்கப் பட வேண்டும் என்று கொரினார்.
இந்தக் கோரிக்கையின் பின்னர் 1952ல் எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்கள் தேர்தலில் போட்டியிட்ட போது மக்கள் அவரது கோரிக்கையை நிராகரித்தார்கள். ஜி.ஜி.பொன்னம்பலத்தின் ஒற்றையாட்சி கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். எனினும் 1955ல் எழுந்த மொழி சமஉரிமை தொடர்பான விடயம் காரணமாக எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்களின் செல்வாக்கு தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்தது. 1956ல் வந்த மொழிச் சட்டம் இதற்கு அதிக வலுவூட்டியது. கொழும்புக்கு வெளியில் அதிகாரங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வழுத்தன. 1957ல் பண்டா செல்வா ஒப்பந்தம், 1965ல் டட்ல் செல்வா ஒப்பந்தம் என்பன இந்த அடிப்படையிலேயே ஏற்படுத்தப்பட்டன.
இந்த இடத்திலே 1972ம் ஆண்டினுடைய சில முக்கிய அம்சங்களை நோக்கினால் இந்த அரசியல் அமைப்பின் மூலம் இலங்கை பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருந்து முற்றாக விலகியது. அடிப்படை மனித உரிமைகள் அந்த அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றன. ஆனால் அதிகாரப் பரவலாக்கல் இடம்பெறவில்லை. ஒற்றையாட்சி வலியுறுத்தப்பட்டது. பௌத்த மதம் விசேட அந்தஸ்தைப் பெற்றது. மொழிச் சமமின்மையும் இடம்பெற்றது.
இவ்விடத்தில் நான் ஒன்றை வலியுறுத்த விரும்புகின்றேன். மூல யாப்பில் ஒற்றையாட்சிஎன்ற விடயம் இடம்பெறவில்லை. அதாவது கெல்வின் ஆர். டி சில்வா அவர்கள் ஒற்றையாட்சி இடம்பெறுவதற்கு காரணமாக இருக்கவில்லை பண்டாரநாயக்க அவர்களின் விடாப்பிடியின் காரணமாகவே இவ்விடயம் அரசியல் அமைப்பில் இடம்பெற்றது.
இவ்விடத்தில் இருந்து பெரு முக்கிய அம்சம் நோக்கப்பட வேண்டும். தமிழர்கள் சார்பில் சம~;டி கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. திரு. தர்மலிங்கம் அவர்கள் அவர்களின் பேச்சாளராக இருந்தார். சம~;டி கோரிக்கையை வலியுறுத்திய வேளையில் கச்சேரி அமைப்புகளுக்கு மாற்றாக மாவட்ட சபைகளை அமைப்பது தொடர்பான முன்மொழிவிi அவர் செய்தார். தாங்கள் சம~;டியைக் கைவிடப் போவதில்லை என்றும் இடைக்காலத் தீர்வாக மாவட்ட சபைகளை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள். எனது கட்சியின் உறுப்பினரான சரத் முத்தட்டுவேகம அவர்கள் இக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை. தமிழ்த் தரப்பினர் முதலாளித்துவக் கொள்கையைப் பின்பற்றுபவர்களாக இருக்கின்றார்கள் என்ற அடிப்படையிலேயே அவர் ஆதரவளிக்காமல இருந்தார். உண்மையில் இது பிழையான நடைமுறையாகும். இங்கு மாவட்ட சபைகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்குமானால் வரலாறு மாறியிருக்கும்.
அடுத்த கட்டத்திற்கு வந்தால் 13வது திருத்தச் சட்டம் தொடர்பா விடயத்தில் கொள்கை அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கத்தில் இது ஒரு மைல்க் கல் எனலாம் இருப்பினும் ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிக்கும் செயற்பாட்டிற்கு இத்திஜருத்தம் இலக்காகியுள்ளது. ஆளுனரின் அதிகாரங்கள் மிகையாக உள்ளன. நிதி சார் விடயங்கள், பொதுச் சேவை ஆணைக்குழுவைக் கட்டுப்படுத்தல் என்பன அதிருப்தி தரும் விடயங்களாகும்.
மாகாணசபை ஆளுனர் ஜனாதிபதியின் பிரதிநிதியாகவே செயற்படுகின்றார். மத்திய பொதுச் சேவை ஆணைக்குழுவில் தலையிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை ஆனால் பொதுச் சேவை ஆணைக்குழுவைக் கட்டுப்படுத்தும் வல்லமை இருப்பதால் ஜனாதிபதியை விட கூடிய அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் காணலாம். 13வது சட்டத்தில் அதிகளவு அடிப்படைப் பிழைகள் காணப்படுகின்றன.
அரசியல் அமைப்பு தொடர்பில் இன்னும் சில விடயங்கள் கவனிக்கப்பட வேண்டும். புதிய அரசியல் அமைப்பு மக்கள் தீர்ப்புக்காக முன்வைக்கப்பட வேண்டும். அவ்வாறு வருகின்ற போது அது தோற்கடிக்கப்பட்டால் அது அந்த அரசாங்கம் தோல்வியுற்றதாகவே அமையும். இன்றைய அரசியல் அமைப்பு ஆக்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிகமான பிரச்சாரங்கள் இல்லை.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் அவர்கள் 1995ம் ஆண்டு தொடக்கம் புதிய அரசியல் அமைப்பு ஆக்கும் முயற்சியில் ஈடுபட்ட காலத்தில் வெண்தாமரை இயக்கத்தின் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார். இதன் காரணமாக அரசியல் அமைப்பு உருவாக்க ஆரம்பத்தில் 28 வீதமாக இருந்த மக்கள் ஆதரவு 1998ல் 68 வீதமாக உயர்த்தினார். ஆனால் அவ் அரசியல் அமைப்பு ஆக்கம் முடிவுறும் தருவாயில் தளதா மாளிகை தாக்கப்பட்டமையால் நிலைமை முற்றாக மாறியது.
இப்போதைய நிலையில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் முற்றாக மட்டுப்படுத்தப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு பாராளுமன்றம் அதிக அதிகாரம் கொண்ட நிறுவகமாக இயங்கும். புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஆக்கப்பட்ட உபகுழுக்கள் அவற்றின் அறிக்கைகளைச் சமர்ப்பித்திருக்கின்றன. இந்த அறிக்கைகளை மரணக்குழி என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றார்கள்.
அரசியல் அமைப்பு ஆக்கம் தொடர்பான நடவடிக்கைக் குழு பாராளுமன்றினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். உபகுழுக்களும் இவ்விதமே உருவாக்கப்பட்டன. உப குழுக்களில் எல்லாக் கட்சிஅ ங்கத்தவர்களும் இருக்கின்றார்கள். வெவ்வேறு கட்சி உறுப்பினர்களும் இவற்றில் தலைவர்களாக இருக்கின்றார்கள். இருந்த போதிலும் கூட்டு எதிரணி அரசியல் அமைப்பை எதிர்க்கப் போவதாகக் கூறிக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன இதற்கு ஆதரவு வழங்கும்.
புதிய அரசியல் அமைப்பு எதிர்நோக்குகின்ற அம்சங்களில் ஒற்றையாட்சி மற்றும் சம~;டி என்கின்ற பதங்கள் முக்கிய இடம்பெறுகின்றன. ஒற்றையாட்சி என்ற கருத்து முன்னைய நிலையில் இன்று இல்லை. உதாரணமாக ஐக்கிய இராச்சியத்தில் அரச அமைப்பு முன்பு ஒற்றையாட்சியாகவே இருந்தது. இப்போது அது அதிகாரப் பரவலாக்கலில் வளர்ச்சி கண்டிருக்கின்றது. அயர்லாந்து பிரிந்து செல்லக் கூடிய அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றது. 1990ல் ஏற்படுத்தப்பட்ட குட் பிறைடே ஒப்பந்தமானது இவ்விடயத்தை வலியுறுத்துகின்றது. இப்போதைய பிரித்தானியாவைப் பார்க்கின்ற போது முன்பிருந்த வெஸ்ட் மினிஸ்டர் அமைப்பு இப்போது இல்லை. வட அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் என்பன சட்டமாக்கும் அதிகாரத்தோடு கூடிய அலகாகக் கொண்டு விளங்குகின்றது.
எனினும் இலங்கையில் ஒற்றையாட்சி தொடர்பாக கருதுகோள் பிரிக்கப்படாத நாடு என்ற வகையிலேயே சிங்கள மக்களால் நோக்கப்படுகின்றது. சிங்கள மக்களால் குறிப்பிடப்படுகின்ற ‘ஏக்கிய’ என்ற சொல்லின் அர்த்தம் இதுவாகவே இருக்கின்றது. இருந்த போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த வாசகத்தின் பயன்பாடு தொடர்பில் அச்சம் தெரிவிக்கின்றது. நீதி மன்றங்கள் இவ்விடயம் தொடர்பான பொருள் கோடலில் பிரிக்கப்படாத பிரிக்கப்படக் கூடாத என்ற வகையில் மட்டும் பொருள் கொள்ளும் என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை என்று அஞ்சுகின்றது. இன்றைய நிலையில் அதிகாரப் பரவலாக்கம் என்பது அர்த்த பு~;டியுள்ளதாக அமைய வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது. அது தற்போதைய 13வது திருத்தமாக இருக்கக் கூடாது என்றும் பேசப்படுகின்றது.
13வது திருத்தத்தில் பல விடயங்கள் தெளிவற்றுக் காணப்படுகின்றன. அடுத்து அடுத்து வந்த அரசுகள் கூட இந்தத் திருத்தத்தை வெவ்வேறு விதமாகக் கையாளுகின்றன. தேசியக் கொள்கை என்ற விடயத்தின் மூலம் மாகாண சபைகளின் அதிகாரங்கள் கலந்துரையாடல் இல்லாமல் பறிக்கப்படுகின்றன. தேசியக் கொள்கை என்ற போர்வையில் அதிகாரங்கள் பறிக்கப்பட்டமைக்கு திவிநெகும சட்டமூலத்தை ஒரு மக்கிய உதாரணமாகக் கொள்ளலாம்.
மஹிந்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையைக் கொண்டிருக்கவில்லை. இருந்தபோதிலும் அவர் வேறு வழிகளைக் கையாண்டு மூன்றில் இரண்டு பெரும்பாண்மையைப் பெற்றார். இதன் காரணமாகவே மேற்குறித்த திவிநெகும சட்டத்தை உருவாக்கினார். 1988ம் ஆண்டு தொடக்கம் 1991ம் ஆண்டு வரை கமநல சேவைகள் மாகாண சபைகளுக்கே வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அதனை நியாயமற்ற வகையில் மத்திய அரசு தன்னகப் படுத்தியது. பல மாகாண வைத்தியசாலைகள் இவ்வடிப்படையிலேயே சுவிகரிக்கப்பட்டன.
நமது தற்போதைய பாராளுமன்ற அமைப்பில் இரண்டாவது அவை இல்லை. இரண்டாவது அவை ஒன்று இருக்கும் போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் இரண்டாவது சபையில் நிறைவேற்ற்படுமு; போதுதான் சட்ட அந்தஸ்தைப் பெறும். எனவே இரண்டாவது சபை எனும் கோரிக்கை இப்போது முன்வைக்கப்படுகின்றது.
தற்போதைய நடைமுறையில் தென்பகுதியைச் சேர்ந்த முதலமைச்சர்கள் அதிகாரப் பரவலாக்கத்திற்கு ஆதுரவு வழங்குகின்றமை மிக முக்கிய அம்சமாகும். அரசியல் அமைப்பு ஒன்று ஆக்கப்படுகின்ற போது அதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியமானது. மக்கள் ஆதரவு பெறவில்லை என்றால் அந்த அரசியல் அமைப்பை ஆக்குவது பயனற்றது.
ஜனாதிபதயைப் பொருத்தவரையில் அவர் சரியான மனநிலையில் இருக்கின்றார். அதிகாரப் பரவலாக்கத்தை அளிப்பதற்கு அதிக அக்கறை உண்டு. ஆனால் மஹிந்தவின் கூட்டு எதிரணி எதிர்க்கின்றது. மக்கள் விடுதலை முன்னனியுடன் இது தொடர்பில் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக் கொள்ளுகின்ற முயற்சிகள் நடைபெறுகின்றன. இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளும் இடம்பெறுகின்றன.
எனகுழுக்களின் அறிக்கையில் அடிப்படை உரிமைகள் தொடர்பான அறிக்கையை சிறப்பித்தக் கூற வேண்டும். இக்குழுவில் நான் முக்கிய பங்காளியாவேன். இங்கு மரபு ரீதியான சமுக, கலாச்சார, பொருளாதார, அரசியல், சுகாதார, சிறுவர் உரிமைகள் போன்ற விடயங்கள் தற்கால வளர்ச்சிப் போக்கிற்கு ஏற்ப மாற்றப்பட்டு அடிப்படை உரிமையில் சேர்க்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் கையாளப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு நம் நாட்டு அரசியல் அமைப்பை ஆக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. இந்த அமைப்பை அர்த்த புஸ்;டியுள்ளதாக ஆக்குவதற்கான முக்கிய தேவைப்பாடு இணக்கப்பாடு ஆகும்.
இலட்சிய அடிப்படையான வலியுறுத்தல்கள் இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தடங்கள்களை ஏற்படுத்தும். எனவே நடைமுறைப்படுத்தக் கூடிய வகையிலான ஒரு அரசியல் அமைப்பே பயன்தரும் முயற்சியாக அமையும். இவற்றை மனம் கொண்டு சவால்களை முகம் கொடுத்து நடைமுறைப்படுத்தக் கூடிய அரசியல் அமைப்பை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment