17 Feb 2017

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் சிவராத்திரி

SHARE
மஹா சிவராத்திரி விரத சிறப்பு நிகழ்வுகள் தேற்றாத்தீவு அருள்மிகு கொம்புச்சந்திப்பிள்ளையார் 
ஆலயத்தில் எதிர்வரும்  வெள்ளிக்கிழமை (24)  சிறப்பாக நடைபெற உள்ளன.

அந்தவகையில் கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு சித்தர்களால் நர்மதா நதிக்கரையில் இருந்து கொண்டு வரப்பட்ட பிரதிஸ்டை பண்ணப்பட்டிருக்கும் உயிர் லிங்கத்திற்கு அடியார்கள் ஆலய புனித கங்கையாகிய 'பால புஸ்கரணிதீர்த்தக்கங்கையில் தீர்த்த நீர் எடுத்துவந்து தங்கள் கைகளினால் அபிஷேகம் பண்ணும் சிறப்பு நிகழ்வு காலை தொடக்கம் பின்னிரவு வரை இடம் பெறும்.


ஆலயத்தில் நான்கு சாமப் பூஜைகளும் இடம் பெறும்.மாலை 6 மணி தொடக்கம் அதிகாலைவரை பஜனைசங்கீதக்கச்சரிநடனம்கதாப்பிரசங்கம்நாட்டுக்கூத்துசமய பேருரைகள் என்பன இடம் பெறும்என ஆலய பரிபான சபையின் தலைவர் த.விமலானந்தராஜா தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: