11 Feb 2017

கருணா தலைமையில் புதிய அரசியல் கட்சி- வீடியோ

SHARE
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்டது என்பதை துணிந்து கூறுவதற்கு கூட்டமைப்பினருக்கு துணிவு இல்லையென முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தற்போது  பிளவுகள் எற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில்அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
கட்சியின் அங்கரார்ப்பண நிகழ்வு ஒன்று இன்று கருணா தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது யாழ்ப்பாணம் வன்னி திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பில் இயங்கிவரும் நாம் திராவிடர் கட்சியும் இதன்போது தமது ஆதரவினை வழங்கியுள்ளது. 
கட்சியின் பொதுச் செயலாளராக மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் வி.கமலதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 
முதலாம் இணைப்பு
முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தலைமையில் அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று கருணா தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. இதன்போது யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதற்கமைய தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் கட்சியை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் செயலாளராக மட்டக்களப்பைச் சேர்ந்த வி.கமலதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: