கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பொருளியல் பாட இலவசக் கல்விக் கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வர்த்தக ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பட்டய கணக்காளர் கற்கைகள் நிறுவகத்தின் (சி.ஐ.எம்.ஏ. ) அனுசரணையில் நேற்றைய தினம் நடைபெற்றது.
மட்டு வர்த்தக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரும் தலைவருமான பிரபல வர்த்தகப் பாட ஆசிரியர் கே.கே.அரஸ் தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற இக் கருத்தரங்கில் கலாநிதி எம்.கணேசமூர்த்தி கலந்து கொண்டு விரிவுரையை நிகழ்த்தினார்.
இதன் ஆரம்ப நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், மற்றும் பொருளியல் பாட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு, மட்டக்களப்பு, கல்குடா, மட்டக்களப்பு மேற்கு, மட்டக்களப்பு மத்தி ஆகிய 5 வலயங்களிலிருந்தும் இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள உயர்தர மாணவர்கள் 900பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி ஊடாக சமூக மேம்பாட்டை அடைந்து கொள்ளுதல் என்ற நோக்கத்தின் ஆரம்பிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு வர்த்தக ஒன்றியத்தினால் எதிர்வரும் காலங்களிலும் இது போன்ற கல்விக் கருத்தரங்குகளும் வேறு பல செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment