(க.விஜி)
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வருடாந்த இல்லவிளையாட்டுப்போட்டி திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட் அவர்களும்,கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்களும்,விஷேட அதிதிகளாக ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பிரதி பொதுமுகாமையாளர் எம்.பத்மசுதன், வலயக்கல்வி அலுவலகத்தின் முன்னாள் உடற்கல்வி சேவைக்கால ஆலோசகர் எம்.உமாபதிசிவம்,பிரதி அதிபர்களான இராசதுரை பாஸ்கரன்,க.சசிகாந்,உபஅதிபர்களான சி.லோகராசா,ச.சதீஸ்வரன்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய அதிகாரி நவரெட்ணம் மௌலீசன், பாடசாலை அபிவிருத்தி சங்கச்செயலாளரும் தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச்சபையின் மாவட்ட முகாமையாளருமான டீ.பீ.பிரகாஸ்,பாடசாலையின் பழைய மாணவசங்க தலைவர் எஸ்.சசிகரன்,பொறியியலாளர் என்.திருவருட்செல்வன்,புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக்குரு ஜே.டவூல்யு.யோகராசா,ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
முதலில் அதிதிகளை மாலை அணிவித்து மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.தேசியக்கொடி,மாகாண, வலய,பாடசாலை,இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு,தேசிய கீதம் இசைக்கப்பட்டது.இதன்பின்பு ஒலிம்பித்தீபம் ஏற்றப்பட்டு சத்தியப்பிரமானம் செய்துகொள்ளப்பட்டு விளையாட்டுக்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.சோமநாதர்,வில்லியம் ஓல்ட்,கோல்டம் ஆகிய இல்லங்களுக்கிடையிலான சுவட்டு நிகழ்வுகள்,அணிநடை,பாண்ட்வாத்தியம் இசைத்தல்,அஞ்சல் ஓட்டம்,உடற்பயிற்சி கண்காட்சி, ,இல்லச்சோடனை,ஆசிரியர்களுக்கான போட்டிகள்,போன்றன நடைபெற்றது.இதன்போது இல்லங்களுக்கிடையிலான திறனாய்வுப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கான சான்றீதழ்களும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment