24 Feb 2017

முல்லைத்தீவு மற்றும் வடபகுதி மக்களின் மீள்குடியேற்றப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காத்தான்குடியில் கவன ஈர்ப்பு பேரணி

SHARE
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு மற்றும் வடமாகாணம் வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு காத்தான்குடி முஸ்லிம்களால் வெள்ளிக்கிழமை (24.02.2017) ஜும்மாத் தொழுகையின் பின்னர்
கவன ஈர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தேசிய ஒருமைப்பாட்டுக்கான முற்போக்குப் பேரவை, காத்தான்குடி அரசியல் களம் ஆகிய அமைப்புக்கள் இந்த கவன ஈர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடாத்தியிருந்தன.

“எங்கு பிரிவு கண்டோமோ அங்கிருந்து ஆரம்பிப்போம்”ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நல்லாட்சி அரசாங்கத்தில் எமது நிலம் எமக்கு வேண்டும், அரசே பூர்வீக நிலத்தில் குடியேறி வாழ விடு, மூவின மக்களின் ஒன்று பட்ட குரலுக்கு நல்லாட்சி நல்ல பதில் சொல்ல வேண்டும்” 'கேப்பாப்புலவு மக்களின் வாழ்விடங்கள், எந்த நிபந்தனை இன்றியும் தாமதமின்றியும் வழங்கப்பட வேண்டும் மக்களின் மீள்குடியேற்றம் எப்போது? போன்ற வாசகங்களைத் தாங்கிய பதாதைகளை ஆதரவாளர்கள் ஏந்தியிருந்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: