அரசாங்கத்தின் திட்டங்கள், கொள்கைகள், மக்களுக்காக எடுக்கப்பட்டிருக்கின்ற நடவடிக்கைகள், மக்களுக்கான நலனோம்புத் திட்டங்கள், மக்கள் தங்களுடைய தேவைகளைப் பெற்றுக் கொள்ளவதற்குச் செல்ல வேண்டிய அலுவலகங்கள், பேசவேண்டிய விடையங்கள், தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலகர்கள், அவற்றுக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய படிவங்கள், போன்றவைகள் தொடர்பில் மக்களிடம் தெழிவு இல்லை. இதனால் மக்கள் பல அலுவலகங்களுக்கு அலைந்து திரிந்து
இறுதியிலே அவர்களது தேவைகளைப் பூத்தி செய்ய முடியாமல் தடுமாறுகின்ற நிலமை உள்ளது. என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவிதுள்ளார்.
தினகரன் பத்திரிகையின் 84 வது ஆண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் புதன் கிழமை இரவு நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
காணாமல் போன உறவினர்கள் அமைப்பின் அங்கத்தவர்கள் சிலர் கடந்த வாரம் என்னிடம் வந்து தகவலறியும் சட்டத்தின் மூலம், எமது உறவினர்கள் காணாமல் போனமை தொடர்பில் பதில் தரவேண்டும், எமக்கு வீடுகள் கிடைக்கவில்லை தகவலறியும் சட்டத்தின் நீங்கள் பதில்தர வேண்டும், எனத் தெரிவித்தார்கள். காணாமல் போனவர்கள் தொடர்பில் நாங்கள் கையாள்வதில்லை எனக்கூறி, மற்றும் வீட்டுத் தேவைகள் குறித்து கிராம சேவகர், பிரதேச செயலாளர் போன்றோரிடம் விண்ணப்பித்துள்ளீர்களா என நான் அவர்களிடம் கேட்டபோது இல்லை நாங்கள் யாரிடமும் விண்ணப்பிக்கவில்லை எமக்கு தகவலறியும் சட்டத்தீன் கீழ் பதில் தரவேண்டும். எனக் கேட்டார்கள்.
எனவே தகவலறியும் சட்டமூலத்தை சாதாரண மக்கள் விளங்கிக் கொள்வதற்கு ஊடகங்கள் துணை புரிய வேண்டும். மக்களுக்கு கிடைக்க வேண்டியவைகள் கிடைக்காவிட்டால், நியாயங்கள் மறுக்கப்பட்டிருந்தால், அநீதி இழைக்கப்பட்டிந்தால், அவைகள் தொடர்பில் தட்டிக்கேட்கின்ற சட்டம்தான் தகவலறியும் சட்டமாகும். மாறாக நிவாரணத்தைக் கேட்கின்ற சட்டமல்ல என்பதை உணர்த்த வேண்டும்.
அரசாங்கத்தின் சட்டமூலங்கள், நிருவாக சுற்றறிக்கைகள், போன்ற மக்களுக்கான ஏற்பாடுகளை மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் மிக எளிய வடிவில் மக்களைச் சென்றடைவதற்கு ஊடகங்கள் செயற்பட வேண்டும். இது அரச நிருவாகத்திற்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஏனைய அனவருக்கும் ஏதுவாக அமையும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment