22 Feb 2017

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் வைத்தியசாலையில் அனுமதி

SHARE
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் வைத்தியசாலையில் அனுமதி. புதன்கிழமை (22.02.2017) இரவு 8 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் (வயது 31) உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

களுதாவளை கடற்கரை  வீதியிலுள்ள அவரது வீட்டுக்கு வந்த இனம் தெரியாத நபர்கள் அவரை வெளியே அழைப்பித்து அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது துப்பாக்கியால் அவர் மீது சுட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

காயங்களுக்குள்ளான அவர் அவர் உடனயாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடிப்  பொலிஸார் விசாணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: