காணாமலாக்கப்படவர்களின் நிலமை மிகவும் அவலமானவை இவற்றுக்கான தீர்வுகள் வெகு விரைவில் கொண்டுவரப்படும் என நம்புகின்றேன். இந்நிலையில் சிலர் குறுகிய மனப்பாங்குடன் செயற்பட்டாலும் பெரும்பாலானவர்கள் பரந்த மனப்பாங்குடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். என கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களத்தினால், அரச ஆடு மரபுரிமை வள மேம்பாட்டு நிலையம் தும்மபங்கேணியில் செவ்வாய்க் கிழமை (14) திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு மேற்படி நிலையத்தை திறந்து வைத்து விட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
50 வருடங்களுக்கு முன்னர் இப்பரதேசத்தில் நான் கடமையாற்றியிருந்தேன், கடந்த யுத்த காலத்தில் 2009 ஆம் ஆண்டு ஜப்பான் நிறுவனம் ஒன்றுடன் கொக்கட்டிச்சோலைக்கு விஜயம் செய்திருந்தேன்.
பாதுகாப்புச் செயலாளராக இருந்தமையால் நான் இனப்பிரச்சனைகளின் அவலங்கள் தொடர்பில் நன்கு அறிந்தவராக உள்ளேன். தற்போது மாற்றங்களே உடனடியாக தேவைப்படுகின்றன. இக்காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பல அபிவிருத்தி நடவடிக்கைகளையும் செயற்படுத்த வேண்டியுள்ளன.
எமது நாட்டு மக்களின் நலிவடைந்த பொருளாதாரங்கள் முன்னேற்றப்பட வேண்டும். இனப்பிரச்சனை ஒரு பாரிய பிரச்சனை அவை கிழக்கைப் பார்க்கிலும் வடக்கில் அதிகமாகும். சம்பூர் மக்களின் நிலத்தை வழங்க ஏற்பாடு செய்தேன். அதுபோல் மீள்குடியேற்ற ங்களும் வெகு விரைவில் செய்யப்பட வேண்டும்.
காணாமலாக்கப்படவர்களின் நிலமை மிகவும் அவலமானவை இவற்றுக்கான தீர்வுகள் வெகு விரைவில் கொண்டு வரப்படும் என நம்புகின்றேன். இந்நிலையில் சிலர் குறுகிய மனப்பாங்குடன் செயற்பட்டாலும் பெரும்பாலானவர்கள் பரந்த மனப்பாங்குடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
உண்மைகளைக் கண்டறியும் குழுவின் அறிக்கைகள் விரைவில் வெளியிடப்படும். என நம்புகின்றேன், எதிர்க்கட் சித்தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகிளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நான் அரசியல்வாதியல்ல. ஆனாலும், பல அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றேன். கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் கீழுள்ள அனைத்து திணைக்களங்களும், சிறப்பாகச் செயற்படும் என உறுதியாக நம்புகின்றேன். கிராமராச்சியக் கொள்கைக்கான முன்னெடுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன அவை வெகுவிரைவில் அமுலாகும் என நம்பகின்றேன் என அவர் தெரிவித்தார்.
16 மில்லியன் பெறுமதியில் அமையப் பெற்றுள்ள இவ்அரச ஆடு மரபுரிமை வள மேம்பாட்டு நிலைய திறப்பு விழா கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்நுலாப்தீன் நஸீர் அஹமட், கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாணசபைத் தவிசாளர் சந்திரதாச கலப்பதி, நடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராசா, உள்ளிட்ட பலர் திணைக்களத் தலைவர்கள் என பலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment