மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திக்கோடை கணேச மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி 25.02.2017ம் திகதி பாடசாலை அதிபரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் மாகாண சபை
உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், மா.நடராசா, ஞா.கிருஷ்ணபிள்ளை ஆகியோரும் வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அதிதிகள் வரவேற்கப்பட்டு கொடிகள் ஏற்றப்பட்டு விளையாட்டு விழா ஆரம்பித்ததுடன் அணிநடை நிகழ்வும் இடம்பெற்றது. கங்கை, யமுனை,காவேரி என மூன்று இல்லங்கள் பிரிக்கப்பட்டு மாணவர்களிடையே அஞ்சல் ஓட்டங்கள் மற்றும் ஓட்ட நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன் மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சியும் நடைபெற்றது. யமுனை 293 புள்ளிகளையும், கங்கை 253 புள்ளிகளையும், காவேரி 233 புள்ளிகளையும் பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) அவர்களினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாடசாலையின் பெயர்பலகையும் நேற்றைய தினம் திரைநீக்கம் செய்யப்பட்டு வைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment